சென்னை

ளும் கட்சிக்கு எதிரான கருத்துக்களை தெரிவித்ததால் தூர்தர்ஷன் விளையாட்டு வினா நிகழ்வில் இருந்து சுமந்த் சி ராமன் விலக்கப்பட்டுள்ளார்

அரசின் தொலைக்காட்சியான தூர்தர்ஷனின் தமிழ் சேனலான பொதிகை சேனலில் “பி எஸ் என் எல் ஸ்போர்ட்ஸ் குவிஸ் என்னும் விளையாட்டு வினா நிகழ்வு நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 17 வருடங்களுக்கும் மேலாக நடைபெறும் இந்த நிகழ்வு இளைஞர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிகழ்வை ஆரம்பத்தில் இருந்து சுமந்த் சி ராமன் நடத்தி வருகிறார். தற்போது அவர் திடீரென இந்நிகழ்வில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து சுமந்த் சி ராமன் தனது முகநூல் பக்கத்தில், “ அன்பு நண்பர்களே, நான் இனி தூர்தர்ஷன் பொதிகை சேனலில் நடைபெறும் பி எஸ் என் எல் ஸ்போர்ட்ஸ் குவிஸ் நிகழ்வில் கலந்துக் கொள்ளக் கூடாது என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதற்கு முக்கிய காரணம் எனது அரசியல் குறித்த கருத்துக்கள் தான் என சொல்லப்படுகிறது. நான் ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு எதிராக தற்போது சில கருத்துக்களை  தொலைகாட்சி கலந்துரையாடலில் தெரிவித்ததாகவும் அதனால் அதிருப்திஅடைந்த அரசு தொலைக்காட்சி நிர்வாகம் என்னை இந்நிகழ்வில் இருந்து விலக்கி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

தற்போது 873 ஆம் வாரமாக நடைபெறும் இந்நிகழ்வு விரைவில் 1000 ஆவது நிகழ்வுக்கு செல்ல உள்ளது.. நான் தனிப்பட்ட முறையில் இந்த நிகழ்வில் கலந்துக் கொள்வதை மிகவும் விரும்பினேன். எங்கு வெளியூர் சென்றாலும் இந்த நிகழ்வின் படப்பிடிப்புக்கு தவறாமல் சென்னை வந்து விடுவேன். என்னை பொறுத்தவரை இந்த நிகழ்வில் இருந்து என்னை வெளியேற்றியது மனதுக்கு துக்கமூட்டும் ஒரு விஷயமாகும்.

கடந்த 3-4 வருடங்களாகவே என்னை இந்த நிகழ்வில் இருந்து நீக்கக் கோரி பல பாஜகவினர் கோரிக்கை விடுத்துள்ளதை நான் அறிவேன். பல தேசிய மற்றும்  மாநில தொலைக்காட்சிகளில் நான் பேசி வரும் அரசியல் கருத்துக்கள் அவர்களுக்கு பிடிக்கவில்லை. மறைந்த தூர்தர்ஷன் இயக்குனர் ராமசந்திரா கடந்த 2015 ஆம் வருடம் என்னை இந்நிகழ்வில் இருந்து நீக்கவேண்டும் என பாஜக அலுவலகத்தில் இருந்து வந்த ஒரு குறும் தகவலை எனக்கு காட்டி உள்ளார். ஆனால் அதை அவர் சட்டை செய்யவில்லை.

அதன்பிறகும் பாஜக தலைமை அலுவலகத்தில் இருந்து என்னை விலக்க வேண்டும் என பல கடிதங்கள் வந்துள்ளன. சில வாரங்கள் முன்பு இந்நிகழ்வில் எனக்கு பதிலாக பெங்களூருவை சேர்ந்த ஒருவரை சேர்க்க முயற்சிகள் நடந்துள்ளன. அதை எனக்கு தூர்தர்ஷன் அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. வேறு சிலர் தெரிவித்தனர். இது குறித்து நான் தூர்தர்ஷன் இயக்குனரிடம் தெரிவித்த போது ஆவன செய்வதாக அவ்ர் வாகக்ளித்தார்.

ஆனால் டில்லி தூர்தர்ஷனிடமிருந்து வந்த உத்தரவால் நான் தற்போது நீக்கப்பட்டுளேன். நான் ஏற்கனவே பதிவு செய்துள்ள நிகழ்வுகள் இன்னும் சில வாரங்கள் ஒளிபரப்பாகும். அதற்குப் பிறகு நிகழ்ச்சி வேறு ஒருவருடன் தொடருமா அல்லது நிறுத்தப்படுமா எனது எனக்கு தெரியவில்லை. இதுவரை நீங்கள் எனக்கும் இந்த நிகழ்வுக்கும் அளித்த ஆதரவுக்கு நன்றி” என பதிந்துள்ளார்.