சென்னை :

மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மக்களவை தேர்தலில் திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. . சென்னை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் , காதர் மொய்தீன் ஆகியோர் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.


இந்நிலையில், திமுக – கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. சென்னையில் திமுக தொகுதி பங்கீட்டுக் குழுவுடன் ஈஸ்வரன் கட்சி நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

மேலும் மக்களவை தேர்தல் பணிகள் தொடர்பாக திமுக, விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆலோசனை நடத்தினார்.