டில்லி

ந்திய அரசின் தொலைதொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் தனது ஊழியர்களுக்கு விருப்ப ஓய்வு திட்டத்தை ரூ.8500 இழப்பிட்டு தொகையுடன் அறிமுகம் செய்ய உள்ளது

இந்திய அரசின் தொலை தொடர்பு நிறுவனமான பி எஸ் என் எல் நாடெங்கும் இதே பெயரிலும் டில்லி மற்றும் மும்பை வட்டாரத்தில் எம் டி என் எல் என்னும் பெயரிலும் இயங்கி வருகிறது.    தற்போது பல தனியார் மொபைல் நிறுவனங்கள் சந்தையில் உள்ள நிலையில் பி எஸ் என் எல் நிறுவனத்தின் லாண்ட் லைன் உபயோகம் மிக மிக குறைந்துள்ளது.

அத்துடன் மொபைல் சேவையிலும் தனியார் நிறுவனங்களுடன் போட்டி போடும்  வகையில் பிஎஸ்என்எல் நிறுவனத்துக்கு இன்னும் 4 ஜி உரிமம் வழங்கப்படாமல்  உள்ளது.   ஆகவே தற்போது இந்த நிறுவனம் பொருளாதார ரீதியாக கடுமையான பின்னடைவில் உள்ளது.

பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு சென்ற 2017-18 வருடம் வரை ரூ.31,287 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.  அத்துடன் ரூ.14,000 கோடி கடன் உள்ளது.   இந்த நிறுவனத்தில் சுமார் 1,76,000 பேர் பணிபுரிகின்றனர்.   நிறுவனத்தின் வருமானத்தில் 60%க்கு மேல் ஊழியர்களின் ஊதியத்துக்கு செலவிடப்படுகிறது.

எம் டி என் எல் நிறுவனத்தில் தற்போது 22000 பேர் பணி புரிகின்றனர்.   இந்நிறுவனத்தின் வருவாயில் 90% ஊதியத்துக்கு செலவாகிறது.   அத்துடன் இந்நிறுவனத்துக்கு ரூ.19000 கோடி கடன் உள்ளது.   இந்த இரு நிறுவனங்களாலும் தற்போதுள்ள நிதி நெருக்கடியால் எந்த ஒரு தொழில் நுட்ப முன்னேற்ற திட்டமும் செயல் படுத்த முடியவில்லை.

இதனால் நஷ்டத்தை குறைக்க இந்த இரு நிறுவனங்களும் விருப்ப ஓய்வூதிய திட்டத்தை அமுல் படுத்த உள்ளன.  இதன்படி விருப்ப ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு அவர்கள் பணி புரிந்த ஒவ்வொரு வருடத்துக்கும் 35 நாட்கள் ஊதியமும் இனி ஓய்வு பெறும் வரையில் உள்ள வருடங்களுக்கு ஒவ்வொரு வருடத்துக்கும் 25 நாட்கள் ஊதியமும் இழப்பீடாக வழங்கப்பட உள்ளன.

இந்த திட்டத்துக்கு ரூ8500 கோடி செலவாகும் என கூறப்படுகிறது.  இது வரை விருப்ப ஓய்வு திட்டத்துக்கு அளிக்கப்ப்ட்ட தொகையில் இது வே மிகவும் அதிகமானது என சொல்லப்படுகிறது.    இதில் பி எஸ் என் எல் நிறுவனத்துக்கு ரூ.6365 கோடியும் எம் டி என் எல் நிறுவனத்துக்கு ரூ.2120 கோடியும் செல்வாகும் என தோராயமாக கணக்கிடப்பட்டுள்ளது.