டில்லி:
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த 49 சிஆர்பிஎப் வீரர்க ளின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் மதிப்பிலான வீடுகள் இலவசமாக கட்டித்தரப்படும் என ‘கிரெடாய்’ (CREDAI – Confederation of Real Estate Developers Association of India) எனப்படும் இந்தியா ரியல் எஸ்டேட் டெவலப்பர்கள் சங்கத்தின் கூட்டமைப்பு அறிவித்து உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி சிஆர்பிஎப் சென்ற வாகனங்கள் மீது, ஜெய்ஷ்இமுகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்த தற்கொலைப்படை பயங்கரவாதி வெடிகுண்டு நிரப்பிய காருடன் வந்து மோதி வெடிகுண்டு தாக்குதலை அரங்கேற்றினார். இந்த பயங்கர தாக்குதலில் 40க்கும் மேற்பட்ட வீரர்கள் சம்பவ இடத்திலேயே உடல்சிதறி உயிரிழந்தனர். மேலும் பலர் மருத்துவமனையில் மரணம் அடைந்தனர். ஏராளமான வீரர்கள் காயமுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குண்டுவெடிப்பில் வீரமரணம் அடைந்த வீரர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து நிவாரண உதவிகள் கொடுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு மட்டுமல்லாது மாநில அரசுகளும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகிறது. தமிழக அரசு ரூ.20 லட்சம் நிதி உதவியுடன் குடும்பத்தில் ஒருவருக்கு அரசுவேலை வழங்குவதாக அறிவித்து உள்ளது.
இந்த நிலையில், புல்வாமா பயங்கரவாத தாக்குதல் மற்றும், அதைத்தொடர்ந்து நடைபெற்ற துப்பாக்கி சூட்டிலும் சேர்த்து இதுவரை உயிரிழந்த 49 வீரர்களின் குடும்பங்களுக்கும் தலா இரண்டு படுக்கை அறை வீடு ஒன்று கட்டித் தரப்படும் என்று ‘கிரெடாய்’ அமைப்பு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக இந்திய ரியல் எஸ்டேட் டெவலப்பர்ஸ் சங்கங்களின் கூட்டமைப் பான ‘கிரெடாய்’ அமைப்பின் சென்னை பிரிவு தலைவர் டபிள்யூ.எஸ்.ஹபீப் செய்தியளார்களிடம் கூறியதாவது,
புல்வாமாவில் நடந்த பயங்கர வாத தாக்குதலிலும் வீரமரணம் அடைந்த தமிழகத் தைச் சேர்ந்த 2 வீரர்களின் குடும்பங்களுக்கும் ‘கிரெடாய்’ தமிழக பிரிவு சார்பில் தலா ரூ.25 லட்சம் மதிப்பிலான வீடு கட்டித் தரப்படும்.
இதேபோல, மற்ற மாநிலங்களைச் சேர்ந்த ‘கிரெடாய்’ சார்பில் அவர்களது நிதி வசதிக்கேற்ப வீடு கட்டித் தரப்படும்.
வீரர் சுப்பிரமணியன் குடும்பத் துக்கு அவரது சொந்த ஊரான கோவில்பட்டியை அடுத்த சவலாப்பேரி கிராமம் அல்லது கோவில்பட்டி அல்லது மதுரை என அவர் களது விருப்பத்தைக் கேட்டு வீடு கட்டித் தரப்படும். அதுபோல, வீரர் சிவச்சந்திரன் குடும்பத்துக்கு அரியலூர் மாவட் டம் கார்குடி கிராமம் அல்லது திருச்சி என அவர்களது விருப பத்தை அறிந்து வீடு கட்டித் தரப்படும்.
இதுதொடர்பாக, ‘கிரெடாய்’ தமிழக பிரிவு நிர்வாகிகள் அவர்களது குடும்பத்தி னரை சந்தித்து பேச சென்று இருப்பதாகவும், அவர்களின் விருப்பத்தின் பேரில் விரும்பும் இடத்தில் வீடுகள் கட்டித்தரப்படும் என்றும் தெரிவித்தார்.
இவ்வாறு அவர் கூறினார்.