சென்னை
சென்னையில் இன்று தங்கம் விலை மிகவும் உயர்ந்து புதிய வரலாற்று உச்சத்தை தொட்டு உள்ளது.
தற்போது திருமண சீசன் என்பதால் தங்கத்தின் தேவை அதிகரித்து வருகிறது. மக்களின் தேவையை பூர்த்தி செய்ய நகைக்கடைக்காரர்கள் அதிக அளவில் தங்கம் வாங்கி வைக்கின்றனர்.
அத்துடன் இந்திய ரூபாய் மதிப்பு சரிவு மற்றும் கச்சா எண்ணெய் விலை உயர்வு ஆகியவை எல்லாம் சேர்ந்து தங்கம் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
இன்றைய (19/2/2019) மாலை விலை நிலவரப்படி சென்னையில் ஆபரணத் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ. 3211 க்கு விற்பனை ஆகிற்து ஒரு சவரன் அதாவது 8 கிராம் ரூ.25,688 க்கு விற்பனை ஆகிறது.
இது இதுவரை இல்லாத அளவுக்கு மிகவும் விலை உயர்வு என்பதால் இது வரலாற்றில் புதிய உச்சம் என கூறப்படுகிறது.
சுத்த தங்கமான 24 காரட் தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.3356 என விற்பனை செய்யப்படுகிறது. 24 காரட் சுத்த தங்கம் ஒரு சவரன் ரூ. 26,864 க்கு விற்பனை ஆகிறது.
இந்த வருடம் மட்டும் தங்கத்தின் விலை 3.3% அதிகரித்துள்ளது.