சென்னை:
அதிமுக, பாஜக கட்சிகளிடையே கூட்டணி பேசப்பட்டு இறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில் இன்று மாலை 4.30 மணிக்கு மேல் நல்ல நேரம் பார்த்து அதிகாரப்பூர்வ மாக அறிவிக்கப்பபட்டது.
கூட்டணி அறிவிப்பை பாஜக தேசிய தலைவர் அமித்ஷா அறிவிப்பார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில், அமித்ஷா இல்லாமலேயே, பியூஸ்கோயல் மற்றும் தமிழக பாஜக தலைவர்கள் உடன் சேர்ந்தது, அதிமுக ஒருங்கிணைப் பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பை வெளியிட்டனர்.
அதன்படி, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பாரதிய ஜனதா கட்சிக்கு 5 பாராளு மன்ற தொகுதிகள் ஒதுக்கப்படுவதாகவும், நடைபெற உள்ள 21 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுகவுக்கு பாஜகஆதரவு அளிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையில், அதிமுக பாமக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு, பாமகவுக்கு 7 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதுபோல, அதிமுக பாஜக கூட்டணியில் தேமுதிக சேரும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது. இன்று மதியம் தேமுதிக தலைவர் விஜயகாந்தை மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சந்தித்து பேசினார். அப்போது இரு தரப்பினரிடையே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை முடிவுபெறாமல், இழுபறி நீடித்து வருவதாக கூறப்படு கிறது.
இதன் காரணமாக தேமுதிகவுக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடப்படாமல் அதிமுக பாஜக கூட்டணி இறுதி செய்யப்பட்டு உள்ளது.
சென்னையில் உள்ள தனியார் ஓட்டலில் மீண்டும் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் மற்றும் பாஜக நிர்வாகிகளுடன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்பட அதிமுக அமைச்சர்கள், முக்கிய நிர்வாகிகள் இன்று மீண்டும் பேச்சு வார்த்தை நடத்தினர்.
இதில் தொகுதி பங்கீடு உறுதி செய்யப்பட்ட நிலையில், அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த கூட்டணியில் தேமுதிக சேருமா என்று இன்னும் உறுதி செய்யப்படாத நிலை யில், புதிய தமிழகம் மற்றும் பாரிவேந்தரின் கட்சிகளுக்கும் இடம் ஒதுக்கப்பட வாய்ப்பில்லை என்று கூறப்படுகிறது.
கூட்டணி அறிவிப்பை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பியூஸ் கோயல், தமிழகம், புதுச்சேரியில் நாற்பதும் நமதே என்ற முழக்கத்தோடு தேர்தலை சந்திப்போம் என்றும், 21 தொகுதி இடைத்தேர்தல்களிலும் அதிமுகவுக்கு பாஜக முழு ஆதரவு அளிப்போம் என்றும் கூறினார்.