சென்னை:
அதிமுக, பாஜக இடையே கூட்டணி இறுதி செய்யப்பட்டு வரும் நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து வந்த மனிதநேய ஜனநாயக கட்சி விலகுவதாக அதன் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி அறிவித்து உள்ளார்.
நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அதிமுக பாரதிய ஜனதாவுடன் இடையே கூட்டணி ஏற்பட்டுள்ளது. இது, அதிமுக கூட்டணி கட்சிகளான தமிமுன் அன்சாரி கட்சி, தணியரசு கட்சி மற்றும் கருணாஸ் கட்சியினருக்கு அதிருப்தியை ஏற்படுத்தியதாக தகவல் வெளியானது.
ஏற்கனவே கடந்த தேர்தலின்போது பாஜகவுக்கு எதிராக குரல் கொடுத்த ஜெயலலிதா, பிஜேபியுடன் கூட்டணி சேருவது தற்கொலைக்கு சமம் என்றும், மோடியா லேடியா என்று சவால் விட்டு வெற்றி பெற்றவர் ஜெயலலிதா.
ஆனால், அவரது மறைவுக்கு பிறகு, எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசு மோடியின் கைப்பாவையாக செயல்பட்டு வருகிறது. தற்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி உறுதி செய்யப்பட்டு விட்ட நிலையில், அதிமுக கூட்டணியில் இருந்து மனிதநேய ஜனநாயகக் கட்சி விலகுவதாக அக்கட்சியின் பொதுச்செய லாளர் தமிமுன் அன்சாரி அறிவித்துள்ளார்.
ஆனால், தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வது குறித்து எந்தவித அறிவிப்பும் வெளியிடவில்லை.
தமிமுன் அன்சாரி, கடந்த தேர்தலின்போது அதிமுகவின் சின்னமான இரட்டை இலை சின்னத்தில் நின்று போட்டியிட்டு வெற்றிபெற்றவர் என்பது குறிப்பிடத் தக்கது.
இதுபோல அதிமுக பாஜக கூட்டணியை எதிர்த்து வந்த தோழமை கட்சி எம்.எல்.ஏக்களான கருணாஸ், தணியரசு போனறோர் இதுவரை எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.