சென்னை:

முன்னாள் அமைச்சர் பாலகிருஷ்ணா ரெட்டிக்கு பொதுச்சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியது தொடர்பான வழக்கில் சிறப்பு நீதி மன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

இதன் காரணமாக அவரது பதவி பறிபோன நிலையில், அவரது தண்டனையை நிறுத்தி வைக்க சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உச்சநீதி மன்றமும் மறுத்து விட்டது.

இந்த நிலையில், பாலகிருஷ்ணா ரெட்டி போட்டியிட்ட ஓசூர் சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

பாலகிருஷ்ண ரெட்டி தொடர்பான நீதிமன்ற தீர்ப்பு நகல் சட்டசபை செயலாள ருக்கு கிடைத்ததை தொடர்ந்து பாலகிருஷ்ண ரெட்டி போட்டியிட்டு வெற்றி பெற்ற ஓசூர் தொகுதி காலியாக இருப்பதாக தமிழக சட்டசபை செயலாளர், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகுக்கு கடிதம் மூலம்  தெரிவித்துள்ளார்.

இதையடுத்து ஓசூர் தொகுதி காலியாக உள்ளதாக தமிழக அரசின் அதிகாரபூர்வ இணைய தளத்தில் தற்போது செய்தி வெளியிடப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 21 ஆக உயர்ந்துள்ளது.