சென்னை:

திமுக, பாஜக  கட்சிகளிடையே கூட்டணி பேசப்பட்டு வரும் நிலையில், கூட்டணியை இறுதி செய்ய பாஜக தலைவர் அமித்ஷா இன்று சென்னை வருகிறார். இன்றைய பேச்சு வார்த்தையுல் இரு கட்சிகளிடையே தொகுதிப்பங்கீடு குறித்து  இறுதி முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது.

தமிழகத்தில் பாஜக அதிமுக கூட்டணி உறுதியாகி உள்ள நிலையில், தொகுதிப்பங்கீடு மற்றும் கூட்டணி கட்சிகளின் தொகுதிகள் குறித்து இறுதி முடிவு எடுக்க முடியாமல் இழுபறி நீடித்து வருக்றது.

ஏற்கனவே கூட்டணி குறித்து பேச்சு வார்த்தை நடத்த பாஜக நியமித்திருந்த மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் சென்னை வந்தது அதிமுக தலைவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தி கூட்ட ணியை இறுதிசெய்து விட்ட நிலையில்,தொகுதி பங்கீடு சிக்கல் நீடித்து வருவதாக கூறப்படு கிறது. மேலும் பாஜக அதிமுக கூட்டணியில் தேமுதிக, பாமக இடம் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், பாஜக தலைவர் அமித்ஷா நேற்று மகாராஷ்டிர மாநிலத்தில் சிவசேனாவுடன் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் போட்டதை தொடர்ந்து, தமிழகம் வருகிறார். இங்கு அதிமுக உடன் இறுதிக்கட்ட பேச்சு வார்த்தை நடத்தி இரு கட்சிகளுக்கிடையே கூட்டணியை இறுதி செய்கிறார்.

அதைத்தொடர்ந்து  பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி அமித்ஷாவை சந்திக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

இதற்கிடையில் செய்தியாளர்களிடம் பேசிய துணை முதல்வர் ஓபிஎஸ்,  தேர்தல் கூட்டணி குறித்து ஓரிரு நாட்களில் அறிவிக்கப்படும் என்றார்.  முன்னதாக, அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி ஆகியோர்,று கிரீன்வேஸ் சாலையில் உள்ள முதலமைச்சர் இல்லத்தில் ஆலோசனை மேற்கொண்டனர்.

இந்த சந்திப்பின்போது பா.ஜ.க.வுடனான கூட்டணி மற்றும் தொகுதிப் பங்கீடு குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.