யநாடு கேரளா

புல்வாமா தாக்குதலில் பலியான கேரள வீரர் வசந்தகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்தும் போது மத்திய அமைச்சர் அல்போன்ஸ் செல்ஃபி எடுத்துக் கொண்டுள்ளார்.

 

புல்வாமா தாக்குதலில் மரணடைந்த சிஆர்பிஎஃப் வீரர்களில் கேரள மாநிலம் வயநாடு பகுதியை சேர்ந்த வசந்தகுமாரும் ஒருவர் ஆவார். இவருக்கு திருமனமாகி இருகுழந்தைகள் உள்ளனர். இவர் இறப்பதற்கு இரண்டு மணி நேரம் முன்பு தனது தாயாருடன் செல்போனில் பேசி உள்ளார். மீண்டும் அழைப்பதாக கூறியவரின் மரணச் செய்தியே அடுத்து அவர்களுக்கு கிடைத்துள்ளது.

அவரது உடல் வயநாடு லக்கிடியில் உள்ள அராசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் அஞ்சலிக்கு வைக்கப்பட்டது. அந்த பகுதி மக்கள் அனைவரும் வசந்தகுமாரின் மரணத்தால் மிகவும் துக்கம் அடைந்துள்ளனர். எராளமானோர் அவருக்கு திறளாக வந்து அஞ்சலி செலுத்தி உள்ளனர்.

கேரளாவை சேர்ந்த சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ் அரசு சார்பில் வசந்தகுமாருக்கு இறுதி மரியாதை செலுத்த வந்தார். இவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரியும் மாநிலங்களவை உறுப்பினரும் ஆவார். வசந்தகுமாரின் இறுதிச் சடங்கின் போது சவபேட்டியின் முன் நின்று சோகமான முகத்துடன் அல்போன்ஸ் ஒரு செல்ஃபி புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார்.

 

இதற்கு சமூக வலை தளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்த புகைப்படத்தை பதிவிட்ட ஒரு டிவிட்டர் பயனாளி,

அன்புள்ள இந்தியா,

இவர் ஒரு ஐஏஎஸ், மாநிலங்களவை உறுப்பினர் மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் அல்போன்ஸ்.   இவர் புல்வாமா தியாகி வசந்தகுமாரின் இறுதிச் சடங்கில் எடுத்துக் கொண்ட செல்ஃபி இதுதான்

அருமையான நடிப்பு அமைச்சர் அவர்களே, ஆனால் உங்கள் மானங்கெட்ட முகத்தை தெளிவாக பார்க்கும்படி வெளிச்சம் இல்லை

என கோபமாக பதிந்துள்ளார்.