கொல்கத்தா:
நாட்டையே உலுக்கியுள்ள புல்வாமா தாக்குதலுக்காக ஏன் 3 நாள் துக்கம் அணுசரிக்கவில்லை என்று பிரதமர் மோடிக்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா கேள்வி எழுப்பி உள்ளார்.
புல்வாமா பயங்கரவாத தாக்குதலில் 44 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்த விவகாரத்தை, தேசிய பிரச்சினையாக நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் அதை தீவிரமாக பார்க்க வேண்டும். யாரும் அதை அரசியல் செய்யக்கூடாது என்று கூறியுள்ள மம்தா, எனினும், இந்த விவகாரத்தில் அரசியலில் இது தொடங்கி விட்டது என்றும் தெரிவித்து உள்ளார்.
நமது நாட்டின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ன செய்து கொண்டிருந்தார் என்று கேள்வி எழுப்பிய மம்தா, இந்த கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள், அவர்களுக்கு தெரிந்து கொள்ள உரிமையும் இருக்கிறது ” என்று கூறினார்.
அங்கே பயங்கரவாத தாக்குதலில் வீரர்கள் பலியான நிலையில், அவர்களுக்கு துக்கம் அணு சரிக்கும் வகையில் மத்தியஅரசு தனது நிகழ்ச்சிகளை ரத்து செய்திருக்க வேண்டாமா என்று கேள்வி எழுப்பியுள்ளவர், ஆனால், பிரதமரோ வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார் என்று குற்றம் சாட்டினார்.
இந்த பயங்கரவாத தாக்குதல் “ஒரு தேசிய பிரச்சினை என்று நாம் கருத்தில் கொள்ள வேண்டும். நாம் அதை தீவிரமாக பார்க்க வேண்டும். யாரும் அதில் அரசியல் செய்யக்கூடாது. எனினும், இதிலும் அரசியல் தொடங்கிவிட்டது.
இந்த துக்க நிகழச்சிக்காக அரசாங்கம் புதிய நிகழ்ச்சிகளை ரத்து செய்யவேண்டும் என்றவர், இதற்காக ஏன் மூன்று நாட்கள் துக்கம் அறிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பினார்.
அரசியல் தலைவர்கள் இறக்கும்போது அவர்கள் மூன்று நாட்களின் துயரத்தை மட்டுமே அறிவிக்கிறார்கள். ஆனால், நாட்டுக்காக உயிர்களை தியாகம் செய்த வீரர்களுக்கு 72 மணி நேரம் துயரம் ஏன் அறிவிக்கவில்லை என்றவர், இறந்த வீரர்களுக்கு ஒரே ஒரு கொடி (தேசிய) மட்டும் போதாது என்றும் கடுமையாக சாடினார்.
பயங்கரவாத தாக்குதலின் பாதிக்கப்பட்டவர்களுக்கு நாங்கள் எங்களது ஆதரவை வெளிப்படுத்த விரும்புவதாக கூறியுள்ள முதல்வர் மம்தா, அவர்களின் குடும்பத்தில் ஒருவராக நிற்கிறோம் என்றும் ஆறுதல் கூறினார்.
இந்த கொடூரமான பயங்கரவாத தாக்குதல் சம்பவம் எப்படி நடைபெற்றது என்று கேள்வி எழுப்பியவர், இது உளவுத்துறையின் தோல்வி என்றும், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் என்ன செய்தார்? என்றவர், இந்த கேள்விகளை மக்கள் கேட்கிறார்கள், அவர்களுக்கு தெரிந்து கொள்ள உரிமை உள்ளது…. பயங்கரவாதிகளுக்கு எதிராக நாம் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
இந்த சம்பவத்துக்கு, மத்திய பாராளுமன்றக் கட்சி கூட்டத்தை கூட்டியதற்கு பதிலாக மத்திய-மாநில அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும் கூட்டியிருக்க வேண்டும் என்றும், மத்தியஅரசு அழைப்பு விடுத்துள்ள இந்த கூட்டத்தில் திரிணாமுல் கட்சி உறுப்பினர்கள் கலந்து கொள்வார்கள் என்று தெரிவித்தவர், ஐந்து ஆண்டு பாராளுமன்ற அமர்வு முடிந்த பிறகு, ம அவர்கள் இந்த கூட்டத்தை ஏன் அழைத்தார்கள் என்று எனக்கு புரியவில்லை.
இவ்வாறு மம்தா கூறினார்.