சென்னை:
நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் தமிழக வரலாற்றில் முதன்முறையாக பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு செய்து புதுமையை புகுத்தியுள்ளது நாம் தமிழர் கட்சி.
தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்பட 40 நாடாளுமன்ற தொகுதிகளில் 20 தொகுதிகள் ஆண்களுக்கும், 20 தொகுதிகள் பெண்களுக்கும் என சரிசமமாக சமத்துவம் கடைபிடிக்கப்பட்டுள்ளது. எந்ததெந்த தொகுதிகளில் ஆண்கள், எந்தெந்த தொகுதிகளில் பெண்கள் என்ற விவரங்களையும் வெளியிட்டு அசத்தியுள்ளார் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான்.
இதேபோல், காலியாக இருக்கும் 21 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு நடைபெறும் இடைத் தேர்தலுக்கான ஆண், பெண் வேட்பாளர்கள் தொகுதிப் பட்டியலையும் இன்று வெளியிட்டார். அதன்படி, 21 தொகுதிகளுள் 11 தொகுதிகளில் ஆண் வேட்பாளர்களும், 10 தொகுதிகளில் பெண் வேட்பாளர்களும் போட்டியிடவுள்ளனர்.
நாடாளுமன்றத் தேர்தலில் ஆண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள்:
மத்திய சென்னை, திருபெரும்புதூர், அரக்கோணம், கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை, சேலம், நாமக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், திண்டுக்கல், தேனி, கரூர், பெரம்பலூர், சிதம்பரம் (தனி), தஞ்சாவூர், தூத்துக்குடி, தென்காசி (தனி), கன்னியாகுமரி, புதுச்சேரி, விருதுநகர்
நாடாளுமன்றத் தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள்:
ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), தென் சென்னை, காஞ்சிபுரம் (தனி), வேலூர், தர்மபுரி, ஆரணி, விழுப்புரம் (தனி), கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி (தனி), பொள்ளாச்சி, திருச்சிராப்பள்ளி, கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் (தனி), சிவகங்கை, மதுரை, இராமநாதபுரம், திருநெல்வேலி
21சட்டப்பேரவை இடைத்தேர்தலில் ஆண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள்:
பெரம்பூர், ஆம்பூர், அரவக்குறிச்சி, நிலக்கோட்டை, விளாத்திகுளம், சாத்தூர், பாப்பிரெட்டிபட்டி, சோளிங்கர், திருவாரூர், ஒட்டப்பிடாரம் (தனி), ஓசூர்
சட்டப்பேரவை இடைத்தேர்தலில் பெண் வேட்பாளர்களுக்கானத் தொகுதிகள்:
ஆண்டிபட்டி, பெரியகுளம் (தனி), தஞ்சாவூர், அரூர் (தனி), மானாமதுரை (தனி), குடியாத்தம் (தனி), திருப்போரூர், திருப்பரங்குன்றம், பரமக்குடி (தனி), பூந்தமல்லி