சென்னை:
சேலத்தில் ரூ.396 கோடி செலவில் 900 ஏக்கரில் கால்நடைப்பூங்கா அமைக்கப்படும் என்று சட்ட மன்றத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 110வது விதியின் கீழ் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. இன்று 3வது நாளாக பட்ஜெட் விவாதங்கள் காரசாரமாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில், விதி எண் 110ன் கீழ் எடப்பாடி முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.
அதில், சேலம் மாவட்டம் தலைவாசலில் 900 ஏக்கரில் ரூ.396 கோடியில் கால்நடை பூங்கா அமைக்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
எடப்பாடியின் அறிவிப்பு சேலம் மாவட்ட மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.