தற்போதைய டிஜிட்டல் உலகில் அனைத்து நடவடிக்கைகளும் இணையதளமாகி உள்ள நிலை யில், இணையதள திருட்டுக்களும் அதிகரித்து வருகின்றன. இந்த நிலையில், குறிப்பிட்டுள்ள சில இணையதளங்களின் வாடிக்கையாளர்களின் தகவல்கள் திருடப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மக்களிடையே மிகவும் பிரபலமாகி உள்ள டப்ஸ்மாஸ் இளையதளம் உள்பட சுமார் 16 இணைய தளங்கள் ஹேக் செய்யப்பட்டு சுமார் 620 மில்லியன் கணக்குகளின் பாஸ்வோர்டு லீக் ஆகி யுள்ளது. எனவே டப்ஸ்மாஸ் பயனாளர்கள் தங்கள் கடவுச்சொல்லை மாற்ற கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
கீழே குறிப்பிட்டுள்ள இணையதளங்களில், நீங்கள் வாடிக்கையாளர்களாக இருந்தால், உங்கள் பார்வேர்டை உடனே மாற்றிவிடுங்கள்….
Dubsmash (162 மில்லியன் கணக்குகள்), MyFitnessPal (151 மில்லியன் கணக்குகள்),
MyHeritage (92 மில்லியன் கணக்குகள்),
ShareThis (41 மில்லியன் கணக்குகள்),
HauteLook (28 மில்லியன் கணக்குகள்),
Animoto (25 மில்லியன் கணக்குகள்),
EyeEm (22 மில்லியன் கணக்குகள்),
8fit (20 மில்லியன் கணக்குகள்),
Whitepages (18 மில்லியன் கணக்குகள்),
Fotolog (16 மில்லியன் கணக்குகள்), 500px (15 மில்லியன் கணக்குகள்),
Armor Games (11 மில்லியன் கணக்குகள்),
BookMate (8 மில்லியன் கணக்குகள்),
CoffeeMeetsBagel (6 மில்லியன் கணக்குகள்), Artsy (1 மில்லியன் கணக்குகள்), மற்றும்
DataCamp (700,000) ஆகியவற்றின் மூலம் தகவல் திருடப்பட்டுள்ளது.
மேலும் இந்த டார்க் வெப் வலைதளத்தில் விற்பனைக்கு கிடைக்கின்ற இந்த தகவல்களில் சில MyHeritage கணக்குள் வழங்கப்பட்டு பரிசோதித்துக் கொள்ள குறிப்பிட்டுள்ளனர்.
MyHeritage உட்பட சில தளங்கள் தங்கள் தகவல் திருடப்பட்டுள்ளது உண்மை எனக் கூறியுள்ளன.