காதலர் தினத்தை கொண்டாடுவதற்காக ஊழியர்கள் கூடுதலாக விடுமுறை எடுத்துக் கொள்ளலாம் என சீனாவில் உள்ள இரு நிறுவனங்கள் அறிவித்தது உலகளவில் பேசப்பட்டு வருகிறது.

china

சீனாவில் மக்கள் தொகை அதிகரித்ததை தொடர்ந்து அனைவரும் ஒரு குழந்தை மட்டும் பெற்றுக்கொள்ள வேண்டும் என்ற சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன் விளைவாக நாட்டில் முதியவர்களின் எண்ணிக்கை அதிகரித்து இளைஞர்களின் எண்ணிக்கை குறைந்ததாக புள்ளி விவரத்தில் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்நாட்டு மக்கள் 2 குழந்தைகளை பெற்றுக் கொள்ளலாம் என சமீபத்தில் சீன அரசு அறிவித்தது.

இந்நிலையில் சீனாவில் ஆண்டுதோறும் புத்தாண்டு பிப்ரவரி 5ம் தேதி கொண்டாடப்படுவதை முன்னிட்டு 7 நாட்களுக்கு விடுமுறை வழங்கப்படுவது வழக்கம். அதன்படி, சீனாவை சேர்ந்த இரு நிறுவனங்கள் 25 முதல் 30 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு கூடுதலாக 8 நாட்கள் விடுமுறை அறிவித்துள்ளது. தற்போது காதலர் தினம் கொண்டாடப்பட்டு வருவதால் இந்த விடுமுறையை மேலும் நீட்டித்துக் கொள்ளலாம் என அந்த நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

காதலர் தினத்தினை கொண்டாடி ஊழியர்களுக்கு விடுமுறை அளித்த சீன நிறுவனம் உலகளவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதர்கு முன்னதாக சீனாவில் உள்ள பள்ளி ஒன்றில் திருமணமாகாத ஆசியர்கள் காதல் செய்வதற்காக விடுமுறை அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.