டில்லி
டில்லியில் அமைந்துள்ள அர்பித் பேலஸ் என்னும் நட்சத்திர ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ள்து.
டில்லி நகரில் கரோல்பாக் பகுதியில் அர்பித் பேலஸ் என்னும் புகழ்பெற்ற நட்சத்திர ஓட்டல் ஒன்று அமைந்துள்ளது.
இன்று அதிகாலை இந்த ஓட்டலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இது குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் உடனடியாக 26 வாகனங்களில் விரைந்து சென்று தீயை அணைக்கும் பனியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தீ விபத்தில் 9 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
இன்னும் தீ அணைக்கும் பணி முழுமையாக முடிவடையாததால் மரண எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.
தீயணைப்பு பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.