சென்னை:

அ.தி.மு.க. சார்பில்  நாடாளுமன்றதேர்தலில் போட்டியிட விருப்பமனுக்கான கடைசி நாள் இன்றுடன் முடிவடைந்த நிலையில், மேலும் 4 நாட்கள் நீட்டித்து அதிமுக தலைமை அறிவித்து உள்ளது.

அதிமுகவில் விருப்ப மனு பெற பிப்ரவரி 14-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற மக்களவைப் பொது தேர்தல் போட்டியிட விரும்பும் அதிமுகவினர், வரும் 4ந்தேதி முதல் வேட்புமனு தாக்கல் செய்யலாம் என கடந்த ஜனவரி 30ந்தேதி அதிமுக தலைமை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.  அதிமுக உறுப்பினர்கள் 25ஆயிரம் ரூபாய் கட்டணம் செலுத்தி விண்ணப்பங்கள்  பெற்று மனு தாக்கல் செய்து வந்தனர்.

இந்த விருப்பமனு விநியோகம் கடந்த 4ந்தேதி தொடங்கிய நிலையில், இன்று மாலை (பிப்ரவரி 10ந்தேதி)  5மணியுடன் முடிவடைய இருந்த நிலையில், தற்போது  விருப்ப மனு பெற பிப்ரவரி 14-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.