இந்தியாவுக்கு எதிரான 3வது டி20 போட்டியில் 4 ரன்கள் வித்யாசத்தில் வெற்றிப்பெற்ற நியூசிலாந்து அணி தொடரை 2-1 என கைப்பற்றியது.

நியூசிலாந்துக்கு சென்ற இந்திய அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்றது. இதன் முதல் போட்டியில் இந்திய அணியை 80 ரன்கள் வித்யாசத்தில் வீழ்த்தி வெற்றிப்பெற்றது. அதனை தொடர்ந்து நடைபெற்ற 2வது டி20 போட்டியில் பதிலடி கொடுக்கும் விதமாக விளையாடிய இந்திய அணி 7 விக்கெட் வித்யாசத்தில் வெற்றிப்பெற்று தொடரை 1-1 என சமன் செய்தது.

newzeeland

இறுதியாக இரு அணிகளும் மோதும் 3வது டி20 போட்டி இன்று ஹாமில்டன் நடைபெற்றது. இதில் டாஸ் வெற்ற இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தார். கடந்த 2 போட்டிகளில் பங்கேற்காக குல்தீப் யாதவ்க்கு இந்த போட்டியில் வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணியின் வீரர் செய்பெர்ட் 43 ரன்கள் எடுத்த நிலையில் தோனியின் ஸ்டெம்பிங்கில் ஆட்டமிழந்தார்.

மற்றொரு வீரரான முன்ரோ அரைசதம் கடந்து 76 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்து வெளியேறினார். அதையடுத்து வந்த கேப்டன் வில்லியம்சன் 26 ரன்களிலேயே வெளியேறினார். அவரை தொடர்ந்துஅ வந்த கிராந்தோமே 30 ரன்களிலேயே வெளியேற இறுதியாக நியூசிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 4விக்கெட் இழப்பிற்கு 212 ரன்களை சேர்த்தது.

இதையடுத்து 213 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர். போட்டியின் தொடக்கத்திலேயே சொதப்பிய ஷிகர் தவான் 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். அவரை தொடர்ந்து வந்த விஜய் சங்கர் 43 ரன்கள் வரை சேர்த்திருந்தார். கேப்டன் ரோஹித் சர்மா 38 ரன்களும், பின்வந்த பண்ட் 28 ரன்களும் எடுத்து ஆட்டமிழந்தனர்.

அதன்பின்னர் வந்த ஹர்திக் பாண்டியா 21 ரன்களும், தோனி 2 ரன்களும் எடுத்து பெவிலியன் திரும்பினர். இதையடுத்து வந்த குல்னால் பாண்டியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி 2 பவுண்ட்ரி மற்றும் ஒரு சிக்சர் அடித்தார். இறுதியா இந்திய அணிக்கு 12 பந்துகளுக்கு 30 ரன்கள் தேவைப்பட்டது. 19வது ஓவரில் இந்திய அணி 14 ரன்களை எடுத்தது. கடைசி ஓவரில் இந்தியா வெற்றிப்பெற்ற 16 ரன்கள் தேவைப்பட்டது. இந்த ஓவரில் தினேஷ் கார்த்திக் ஒருசில தவறுகள் செய்ய இந்தியா வெற்றி வாய்ப்பை இழந்தது.

இறுதியாக 20 ஓவருக்கு 6 விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி 208 ரன்களை மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 3வது டி20 போட்டியை 4ரன்கள் வித்யாசத்தில் நியூசிலாந்து வென்றது. மேலும், 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என நியூசிலாந்து கைப்பற்றி கோப்பையை வென்றது.