3வது டி20 போட்டி: டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு!

நியூசிலாந்துக்கு எதிரான 3வது டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. இரு அணிகளும் மோதும் இந்த போட்டியில் ஹாமில்டன் மைதானத்தில் நடைபெறுகிறது.

3rd

நியூசிலாந்து சென்றுள்ள இந்திய அணி, 3 டி-20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதன் முதல் போட்டியில் இந்திய அணி 80 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி நியூசிலாந்து அணி வெற்றிப்பெற்றது. இதற்கு அடுத்ததாக நடந்து முடிந்த இரண்டாவது போட்டியில் பதிலடி கொடுக்கும் விதமாக 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற இந்திய அணி தொடரை 1-1 என சமன் செய்தது.

இந்நிலையில் இரு அணிகள் மோதும் மூன்றாவது டி-20 போட்டி இன்று ஹாமில்டனில் நடைபெற்று வருகிறது. இதில் ‘டாஸ்’ வென்ற இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா முதலில் ‘பந்து வீச்சை’ தேர்வு செய்தார். இந்த போட்டியில் சஹாலுக்கு பதிலாக குல்தீப் சேர்க்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-