டில்லி

ஃபேல் ஒப்பந்தம் குறித்த உச்சநீதிமன்ற தீர்ப்பு நீதித்துறையி நம்பக்த்தன்மையை குறைத்துள்ளதாக முன்னாள் பாஜக அமைச்சர் அருண் ஷோரி தெரிவித்துள்ளார்.

ரஃபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் முன்னாள் பாஜக அமைச்சரும் பிரபல பத்திரிகையாளருமான அருன் ஷோரி, முன்னாள் பாஜக தலைவர் யஷ்வந்த் சின்ஹா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் இந்த ஒப்பந்தத்தில் முறைகேடு நடைபெறவில்லை என திர்ப்பு அளித்தது. இந்த தீர்ப்பினால் பலர் அதிருப்தி அடைந்தனர்.

நேற்று அருண் ஷோரி ஒரு நிகழ்வில் கலந்துக் கொண்ட போது செய்தியாளர்கள் அவரிடம் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததற்கு அவர் வருத்தம் அடைந்துள்ளாரா என வினா எழுப்பினார்கள். அதற்கு அருண் ஷோரி, “இல்லவே இல்லை. நான் ஏன் வருந்த வேண்டும்? உண்மையில் தற்போதைய ஆட்சி நீதித்துறையின் நம்பகத்தன்மையை குறைத்து விட்டது என்பது அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.

மேலும் அரசு உச்சநீதிமன்றத்துக்கு அளித்த அறிக்கையில் உள்ள விவரங்களில் இருந்து அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. நாங்கள் எங்கள் கருத்தை நிருபித்தோம். ஆயினும் தீர்ப்பு எங்கள் தரப்புக்கு சாதகமாக இல்லை. தீர்ப்பை எதிர்த்து நாக்கள் விரைவில் மறுசீராய்வு மனு ஒன்றை அளிக்க உள்ளோம்.

அரசு பத்திரிகைகளை தன் கைக்குள் வைத்துள்ளது. ஓரிரு பத்திரிகைகள் மட்டுமே பத்திரிகையாளர்களின் கடமையை சரியாக செய்கிறது. தற்போது பத்திரிகை தர்மம் என்பது இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதாக மட்டுமே உள்ளது. பெரும்பாலான பத்திரிகைகள் உண்மையைப் பற்றி கவலைப்படாமல் அரசு ஆதரவு மட்டுமே தங்கள் கொள்கையாக இயங்கி வருகின்றன.

உண்மையைக் கொண்டு வர தற்போது எந்த பத்திரிகையும் ஆர்வம் கட்டுவதில்லை. ரஃபேல் விவகாரத்தில் உண்மையை அறிந்துக் கொள்ள இணையத்தில் சென்று அரசின் கொள்கைகளை மட்டுமே படிக்க வேண்டி உள்ளது. ஆனால் அது உண்மையை சொல்லாது. ஆனால் பல பத்திரிகையாளர்கள் உண்மையைக் கொண்டு வர முயல்வது இல்லை.

வாயில் எலும்பை கவ்விக் கொண்டிருக்கும் நாயால் குரைக்க முடியாது. தற்போது பிரதமர் மோடி என்ன செய்கிறார் என்பது கேள்வி இல்லை. நாம் என்ன செய்ய வேண்டும் என்பது தான் கேள்வி. அரசில் இருப்பவர்கள் தாம் சொல்வதை மட்டுமே நீங்கள் நம்ப வேண்டுமென எதிர்பார்க்கலாம். ஆனால் நாம் அப்படியில்லாமல் உண்மையை மட்டும் நம்பி வெளியிட வேண்டும்” என பதில் அளித்துள்ளார்.