நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் 7 விக்கெட் வித்யாசத்தில் இந்திய அணி வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி சமன் செய்துள்ளது.

rishabh

இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதிய 2வது டி20 போட்டி ஆக்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

அதன்படி முதலில் களமிறங்கிய செய்பெர்ட் மற்றும் முன்ரோ தலா 12 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தனர். அதன்பின்னர் களமிறங்கிய கேப்டன் வில்லியம்சனுடன் இணை சேர்ந்த, மிட்செட் 1 ரன்னிலும் ஆட்டமிழந்து வெளியேறினார். இதன் காரணமாக 50 ரன்களுக்குள் நியூசிலாந்து அணி 4விக்கெட்டுகளை இழந்தது. அதன் வில்லியம்சனுசன் இணை சேர்ந்த கிராண்ட் ஹோம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரைசதம் அடித்தார். அதேபோன்று ராஸ் டெய்லர் 42 ரன்களில் வெளியேறினார்.

இறுதியாக 20 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 8 விக்கெட் இழப்பிற்கு 158 ரன்களை சேர்த்தது. இந்திய அணியின் சார்பில் குருனாஸ் பாண்டியா 3விக்கெட்டுகளையும், கலீல் அகமது 2விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். இதனை தொடர்ந்து 159 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி வீரர்கள் களமிறங்கினர்.

இந்திய அணியின் தொடக்க வீரரான ரோஹித் சர்மா சிக்ஸர் மற்றும் பவுண்ட்ரிகளை விளாசி அரைசதம் எடுத்தார். அதேபோன்று 2 பவுண்ட்ரிகளை அடித்து தவான் 30 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இவர்களை தொடந்து வந்த விஜய் சங்கர் 14 ரன்களில் ஆட்டமிழக்க இறுதிவரை ரிஷப் பண்ட் மற்றும் தோனி அதிரடியாக விளையாடினர். பவுண்ட்ரி மற்றும் சிக்ஸர் அடித்த ரிஷப் பண்ட் 40 ரன்களும், தோனி 20 ரன்களும் எடுத்திருந்து களத்தில் இருந்தனர்.

இறுதியாக இந்திய அணி 18.5 ஓவர்களுக்கு 3விக்கெட்டுகளை இழந்து 162 ரன்களை சேர்த்து வெற்றிப்பெற்றது. இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரை 1-1 என இந்திய அணி சமன் செய்துள்ளது.