சென்னை:
2019-20ம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை துணைமுதல்வர் ஓபிஎஸ் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார். அதில் சென்னை மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.2681 கோடி ஒதுக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்“
சென்னை மெட்ரோ ரயில் திட்ட முதல்கட்டத்தில் 45.01 கி.மீ தூரமுள்ள வழித்தட பணி நிறைவு செய்யப்பட்டுள்ளது
2 வழித்தடங்கள் பிப்ரவரி முதல் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது.
மீனம்பாக்கம் முதல் கிளாம்பாக்கம் வரை மெட்ரோ ரயில் திட்ட வழித்தடம் நீடிக்க ஆய்வு செய்யப்படுகிறது.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2வது கட்டத்தின்கீழ் 118.90 கி.மீ நீளமுள்ள 3 மெட்ரோ ரயில் வழித்தடங்கள் அமைக்கப்படும்.
மாதவரம்-சோழிங்கநல்லூர், மாதவரம்-கோயம்பேடு பஸ் நிலையம் வரை 52.01 கி.மீ நீளமுள்ள வழித்தடங்களில் மெட்ரோ திட்டம் கொண்டு வரப்படும்.
சென்னை மெட்ரோ ரயிலின் 2வது கட்டத்தை செயல்படுத்துவதன் மூலம் ரயில் பாதை 172.81 கி.மீயாக அதிகரிக்கும்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டங்களுக்காக ரூபாய் 2681 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
இவ்வாறு பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.