டில்லி

த்திய உள்துறை அமைச்சகம் மத்திய பாதுகாப்புப் படையில் உள்ள 76,578 காலி இடங்களை நிரப்ப முடிவு செய்துள்ளது.

மத்திய பாதுகாப்புப் படையில் மத்திய எல்லைக் காவல்துறை, மத்திய உள்துறை காவல்துறை, எல்லை பாதுகாப்பு படை உள்ளிட்ட பல பிரிவுகள் உள்ளன. இவற்றில் பல ஆண்டுகளாக காலி இடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.

இது குறித்து மாநிலங்கள் அவையில் கேள்வி ஒன்று எழுப்பபட்டது.

அந்த கேள்விக்கு பதில் அளிக்கையில் மத்திய உள்துறை அமைச்சகம், ”தற்போது மத்திய ப் ஆதுகாப்ப்புப் படையில் சுமார் 84.037 காலி இடங்கள் உள்ளன. இதில் அதிக பட்சமாக மத்திய எல்லைக் காவல்துறையில் 22980 காலி இடங்கள் உள்ளன.

இவற்றில் 76578 இடங்களை உடனடியாக நிரப்ப அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

இந்த காலி இடங்களுக்கு காரணம் பணி ஓய்வு, ராஜினாமா, மரணம், பணி உயர்வு ஆகியவைகள் ஆகும். இதில் பெரும்பாலான காலி இடங்கள் காவலர் (கான்ஸ்டபில்ள்) பணியில் உள்ளது. “ என தெரிவித்துள்ளது.