ஸ்ரீநகர்:
கடந்த ஞாயிற்றுக் கிழமை காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகருக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி, பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கிவைத்தார்.
அதன்பிறகு பிரபல தல் ஏரிக்கு சென்றார். மோடி வருகையையொட்டி ஸ்ரீநகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மோடி அருகே பாதுகாப்புப் படையினர் தவிர வேறு யாரையும் அனுமதிக்கவில்லை.
வீடியோ கேமிரா பிரதமரை சுற்றிச் சுற்றி வந்தது. பிரதமர் வழக்கம்போல் கை அசைத்தார். ஆனால், அவர் கை அசைத்த இடத்தில் ஆளே இல்லை. பிரதமர் மோடி கை அசைப்பதை மட்டுமே கேமிரா பதிவு செய்து கொண்டிருந்தது.
அவர் பின்னால் பாதுகாப்பு அதிகாரிகள் மட்டுமே நின்று கொண்டிருந்தனர்.
ஏரியை சுற்றிப் பார்க்கும் பிரதமர் மோடி ஆளே இல்லாத திசையை நோக்கி கை அசைக்கிறார்.
வீடியோ காட்சியைப் பார்க்கும்போது, “ஆளே இல்லாத கடையில் யாருக்குப்பா டீ ஆத்துறே ?” என நடிகர் விவேக் ஒரு திரைப்படத்தில் கேட்கும் டயலாக் தான் நினைவில் வந்து போகிறது.