சென்னை:
மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு கட்டுவது தான் தமிழகத்தின் வளர்ச்சி திட்டமா..? என்று தமிழ அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி விடுத்தது.
நெடுஞ்சாலைகள் ஆக்கிரமிப்பு தொடர்பான பொதுநல வழக்கு சென்னை உயர்நீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் அரசுக்கு சரமாரியாக கேள்விக்கணைகளை வீசினர்.
அரசு நிலத்தை அரசே ஆக்கிரமிக்க கூடாது என எச்சரித்தளள நீதிமன்றம், மறைந்த தலைவருக்கு நினைவு வளைவு கட்டுவது தான் வளர்ச்சி திட்டமா என்று கேள்வி எழுப்பியுள்ளது.
வரிசையாக வளைவுகளை வைத்து கொண்டே இருந்தால் சிலைகளை போல நினைவு வளைவுகளும் மாநிலத்தில் அதிகமாகிவிடும் என கருத்து தெரிவித்த உயர்நீதி மன்றம், சென்னையில் உள்ள நெடுஞ்சாலைகளின் விவரங்களை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.