புதுடெல்லி:

உலக வெப்பமயமாதலின் தாக்கத்தால், 2100-ம் ஆண்டுக்குள் உலகளாவிய வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என்றும், கடலின் நிறம் பச்சை மற்றும் நீல நிறமாக மாறும் என்றும் விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர்.


உலக வெப்பமயமாதல் பிரச்சினை நம் கண் முன்னே நின்று கொண்டு மிரட்டிக் கொண்டிருக்கிறது. இதனை சமாளிப்பதற்காக, உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகின்றன.
வெப்பமயமாதலின் போது, நீர் மாசு தலையாய பிரச்சினையாக இருக்கும் என்று தெரிகிறது.

இதே நிலை தொடர்ந்தால் கடலின் நிறம் பச்சை மற்றும் நீல நிறமாக மாறும்.

பைட்டோபில்கான்கள் சிறிய உயிரினங்களாகும்.
இவை சூரிய ஒளியை ஒளிச்சேர்க்கை வழியாக ரசாயன ஆற்றலாக மாற்றுகிறது. குடிநீருக்கு அடியே உணவுச் சுழற்சியில் இவை முக்கிய பங்காற்றும்.

கடந்த 2018-ம் ஆண்டு ஆய்வின்படி, கடலின் வெப்பம் அளவு வேகமாக அதிகரித்து வந்துள்ளதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.