சென்னை:
மக்களவை தேர்தலுடன் சட்டமன்ற தேர்தலும் நடந்தால் தமிழகத்துக்கு விடுதலை கிடைக்கும் என்றும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே வேந்தோனி ஊராட்சியில் திமுக சார்பில் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
கூட்டத்தில் பேசிய ஸ்டாலின், ” 18 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டதால்தான் அதிமுக ஆட்சி நீடிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்தால் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தி அனைத்து கிராமங்களுக்கும் குடிநீர் கொண்டு செல்லப்படும். மக்களவை தேர்தலோடு சட்டமன்ற தேர்தலையும் நடத்தினால்தான் தமிழகத்துக்கு விடுதலை கிடைக்கும்” என்றார்.