சென்னை:

மிழக அரசு நினைத்தால், திருட்டுத்தனமாக படத்தை இணையதளங்களில் வெளியிடும்  தமிழ் ராக்கர்ஸை ஒரே நாளில் முடக்க முடியும் என நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

இன்று  தலைமை செயலகம் வந்த நடிகர் விஷால், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து பேசினார். பின்னர் தலைமைசெயலக வளாகத்தில் செய்தியாளர்களை சந்திதார்.

அப்போது,  ‘இளையராஜா 75’ நிகழ்ச்சியை நடத்த உறுதுணையாக இருந்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிக்க சந்தித்தாக கூறினார். வரும் ‘ஜூலை முதல் வாரத்தில் நடிகர் சங்க கட்டடத் திறப்பு விழா நடைபெறும் என்று கூறியவர், . திருட்டு விடியோ தொடர்பாக உரிய நடவடிக்கை கள் எடுக்க வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்துள்ளோம் என்றும் தெரிவித்தார்.

திருட்டு வீடியோ விவகாரத்தில் முதல்வர்  உரிய நடவடிக்கைகள் எடுப்பார் என நம்புவதாக தெரிவித்த விஷால், தமிழக அரசு நினைத்தால் ஒரே நாளில் தமிழ் ராக்கர்ஸ் தளத்தை முடக்க முடியும் என்றும் கூறினார்.

இளையராஜா நிகழ்ச்சி மூலம் திரட்டப்பட்ட நிதி நலிந்த தயாரிப்பாளர்களின் நலனுக்கு பயன்படுத்தப்படும்’ என்று மேலும் தெரிவித்தார்.