புதுடெல்லி:
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சித் தலைவராக கே.எஸ். அழகிரியை அகில இந்திய காங்கிரஸ் கட்சி நியமித்துள்ளது.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் பணியாற்றி வந்தார். இந்நிலையில், திருநாவுக்கரசருக்குப் பதிலாக கே.எஸ்.அழகிரியை புதிய காங்கிரஸ் தலைவராக அகில இந்திய காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களாக வசந்தகுமார், மயூரா ஜெயக்குமார், விஷ்ணுபிரசாத், கே.ஜெயக்குமார் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் அறிவித்துள்ளார்.
புதிதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள கே.எஸ். அழகிரி கடலூர் மக்களவை உறுப்பினராக இருந்தவர்.
Patrikai.com official YouTube Channel