டில்லி:
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க உத்தரவிட்டதை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்கள் மீதான விசாரணை வரும் புதன்கிழமை (பிப்ரவரி 6ந்தேதி) விசாரிக்கப்படும் என உச்சநீதி மன்றம் அறிவித்து உள்ளது.
சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. இதற்கு கேரளாவில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. பல இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றது. இந்த நிலையில், உச்சநீதி மன்ற தீர்ப்பை எதிர்த்து 48 சீராய்வு மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்டன.
மனுவை அவசர வழக்காக விசாரிக்க கோரி பலமுறை முறையிட்டும், உச்சநீதி மன்றம் விசாரிக்க மறுத்த நிலையில், இறுதியாக ஜனவரி 22-ம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், விசாரரைணை அன்று நீதிபதி இந்து மல்ஹோத்ரா மருத்துவ விடுப்பில் இருந்ததால் விசாரணை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
இந்த நிலையில், வரும் 6ந்தேதி (புதன்கிழமை) விசாரிக்கப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. தலைமை நீதிபதி ரஞ்சன் கோகோய் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு சபரிமலை சீராய்வு மனுவை விசாரிக்க உள்ளது.