சென்னை:
நேற்று சென்னை மற்றும் கோவையில் வணிக நிறுவனங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதில் சென்னையில் 72 இடங்களிலும் கோவையில் 2 இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த சோதனைகளின்போது பல்வேறு ஆவனங்கள் கைப்பற்றப்பட்டு உள்ளதாக வும், கட்டுமான நிறுவனங்களில் நடைபெற்ற சோதனையின்போது கணக்கில் வராத ரூ.15 கோடி அளவிலான ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
சென்னையில் நேற்று காலை முதல் தி லீகன்ட் சரவணா ஸ்டோர் பாடி மற்றும் திநகரில் உள்ள சரவணா ஸ்டோர்ஸ் கடைகள், நிறுவர்களின் வீடுகள் மற்றும்,
சென்னை பெரம்பூரில் இயங்கி வரும் ரேவதி தங்க மாளிகை, ரேவதி வீட்டு உபயோக பொருட்கள் கடை, ரேவதி சூப்பர் மார்க்கெட் மற்றும் துணிக்கடைகளில் வருமான வரி புலனாய்வு பிரிவு அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
அதுபோல சேத்துப்பட்டு ஹாரிங்கடன் சாலையில் தலைமையிடமாக கொண்டு செயல்படும் பிரபலமான ஜி-ஸ்கொயர் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
தாம்பரம் சேலையூரில் இயங்கி வரும் லோட்டஸ் குழும நிறுவனத்திலும் அதன் உரிமையாளர் பாலா என்பரது திருவான்மியூரிலுள்ள வீட்டிலும் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிறுவனங்களுக்கு சொந்தமான மொத்தம் 72 இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
இந்த நிலையில், ஜி ஸ்கொயர் மற்றும் லோட்டஸ் கட்டுமான நிறுவனங்களில் நடந்த சோதனையில் இதுவரை 15 கோடி ரூபாய் சிக்கியதாக கூறப்படுகிறது. இதுதவிர பல கோடி ரூபாய் வரிஏய்ப்பு செய்ததையும் வருமானவரித்துறை கண்டுபிடித்துள்ளது.
புதன்கிழமை இரண்டாவது நாளாக சோதனை நடைபெறும் என அதிகாரிகள் தரப்பில் தெரிவித்துள்ளனர்.
சென்னை வணிக நிறுவனங்களில் நடைபெற்று வரும் வ: கணக்கில் வராத ரூ. 15 கோடி பறிமுதல்