கூகிள் நிறுவனத்தின் மிகவும் பிரபலமான மின்னஞ்சல் சேவையான ‘ஜி மெயில்’ இன்று மாலை 5 மணி அளவில் திடீரென முடங்கியது. இதன் காரணமாக வலைதளவாசிகள், நெட்டிசன்கள் பரபரப்பைடைந்தனர்.
இன்று உலகம் முழுவதும் அதிகம் பேரால் பயன்படுத்தும் மெயில் எது என்றால் அது ஜி-மெயில் என்றுதான் சொல்ல வேண்டும். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிமுகப்படுத்திய ஹாட் மெயில், யாகூ மெயில் போன்றவற்றை பின்னுக்கு தள்ளிவிட்டு, தனக்கென தனி இடத்தை பிடித்து, மக்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளது ஜி மெயில்.
இன்றைய நவீன டிஜிட்டல் யுகத்தில், அனைத்து தரப்பினரும் ஜிமெயில் சேவை யினை பயன்படுத்தியே தங்களது செயல்பாடுகளை நிர்வகித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று பிற்பகல் திடீரென ஜிமெயில்சேவை முடங்கியது. பயனர்கள் ஜிமெயிலுள் நுழைய முடியவில்லை , லாகின் செய்தால், அதற்கு பதிலாக பயன்பாடு 404 எரர் என்று தெரிவித்து வெளியேறுகிறது. இதன் காரணமாக நெட்டிசன்கள், வலைதளவாசிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஜிமெயில் முடங்கியது குறித்து சமூக வலைதளங்களான டிவிட்டர், பேஸ்புக் போன்றவற்றிலும் பல்வேறு கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றனன.