ராஜீவ்மேனன்  இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்வம் தாளமயம்’ படம் பிப்ரவரி 1ந்தேதி படம் வெளியாவதாக ராஜீவ் மேனன் அறிவித்துள்ள நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுஉள்ளது.

 

ராஜீவ் மேனனின் மைன்ட் ஸ்கிரின் (MIND SCREEN)  நிறுவனம் தயாரித்துள்ள சர்வம் தாளம் மயம் படத்தில், இசையமைப்பாளர், நடிகர்  ஜீ.வி.பிரகாஷ் நடித்துள்ளார். அவருடன் மலையாள நடிகர் நெடுமுடி வேணு, வினித், டிடி உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்துக்கு  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

இந்த படம் பிப்ரவரி 1ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஏற்கனவே படத்தின் பாடல்கள், டீசர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.

படத்தின் டிரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்