ஆம்ஸ்டர்டேம்:
மார்பகப் புற்றுநோயை 11 நாட்களில் குணப்படுத்தும் மருந்தை இங்கிலாந்து டாக்டர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டேம் நகரில் ஐரோப்பிய அளவிலான மார்பகப் புற்றுநோய் குறித்த மாநாடு நடைபெற்றது.
இதில் பேராசிரியர் நிகல் பன்ரெடு தாக்கல் செய்த ஆராய்ச்சிக் கட்டுரையில் கூறியிருப்பதாவது;
மார்பகப் புற்றுநோய் சிகிச்சைக்கு ஹெர்செப்டின் மற்றும் லேபடினிப் ஆகிய மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன.
முதல் முறையாக மார்பகப் புற்றுநோய்க்கு அறுவை சிகிச்சை மற்றும் கீமோ தெரபி செய்வதற்கு முன்பு, இரண்டு மருந்துகளையும் சேர்த்துக் கொடுத்தோம். 11 நாட்களில் மார்பகப் புற்றுநோய் குணமானது.
இங்கிலாந்து புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் நிதியுதவியுடன் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.
இந்த மருந்துகளை சேர்த்துக் கொடுத்தபோது புற்றுநோய் செல்கள் வளர்ச்சி தடுக்கப்பட்டது தெரிந்தது. இதனால் அறுவை சிகிச்சை மற்றும் கீமோதெரபி கொடுப்பதற்கு அவசியம் இல்லாமல் போனது.
வழக்கமான பக்க விளைவுகளான தலைமுடி உதிர்தல், வாந்தி, தலைசுற்றல் ஆகியவை தவிர்க்கப்பட்டன.
கீமோ சிகிச்சை பெரும்பாலான நோயாளிகளுக்கு பொருந்துவதில்லை. எப்படியோ, ஏதாவது ஒரு மாற்று வரவேற்புக்குரியதே.
மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 257 பெண்களிடம் சோதனை நடத்தினோம். இதில் 11 சதவீதம் பேரும்கு 11 நாட்களிலேயே புற்றுநோய் செல்கள் காணாமல் போயின. 17 சதவீதம் பேருக்கு ஆச்சரியம் அளிக்கும் வகையில் கட்டிகள் சுருங்கின.
இந்த ஆய்வறிக்கை மாற்று சிகிச்சைக்கு வழிவகுக்கும். மார்பகப் புற்றுநோய்க்கு எதிராக இன்னும் போராட வேண்டியுள்ளது.
உலகம் முழுவதும் சவாலாக உள்ள மார்பகப் புற்றுநோயை முற்றிலும் குணப்படுத்த ஆண்டுதோறும் நிகழும் மருத்துவ வளர்ச்சி உதவும்.
இவ்வாறு அவர் தாக்கல் செய்த மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.