காந்திநகர்

குஜராத்தின் புகழ் பெற்ற அமுல் பால் நிறுவனம் 500 மிலி ஒட்டகப் பால் பெட் பாட்டில்கள் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது.

நகைச்சுவை நடிகர் வடிவேலு ஒரு படத்தில் டீக்கடைக்காரரிடம், “ஒட்டகப் பாலில் தேநீர் போட சொன்னால் மாட்டுப் போடுகிறாயா” என கோபித்து டீயை தூக்கி வீசுவார். அதற்கு டீக்கடைக்காரர் “நான் ஒட்டகப்பாலுக்கு எங்கே போவேன்?” என கேட்பார். இது நகைச்சுவையாக இருப்பினும் இந்தியாவில் ஒட்டகப்பால் கிடைக்காது என்பதே உண்மையாகும்.

தற்போது பிரபல பால் நிறுவனமான அமுல் நிறுவனம் முதன்முறையாக 500 மிலி பெட் பாட்டில்களில் ஒட்டகப்பால் விற்பனையை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஒட்டகப்பாலின் விலை 500 மிலி ரூ.50 ஆகும். அத்துடன் இந்த ஒட்டகப்பால் விரைவில் கெட்டு விடும் என்பதால் உடனுக்குடன் குளிர்சாதன பெட்டியில் வைத்து பயன்படுத்த வேண்டி இருக்கும்.

இது குறித்து அமுல் நிறுவன விற்பனை அதிகாரி, “ஒட்டகப் பால் சாக்லேட்டை சில தினங்களுக்கு முன்பு அறிமுகம் செய்தோம். அதற்கு கிடைத்த வரவேற்பைக் கொண்டு தற்போது ஒட்டகப் பால் விற்பனை அறிஉகம் செய்துள்ளோம். ஒட்டகப்பாலில் இன்சுலினுக்கு இணையான புரதம் உள்ளது. ஆகவே சர்க்கரை நோயாலிகளுக்கு நல்லதாகும்” என தெரிவித்துள்ளார்.