சென்னை

துரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்ட வரும் பிரதமர் மோடிக்கு எதிராக டிவிட்டரில் #கோபேக் மோடி என்னும் பதிவு பிரபலமாகி வருகிறது.

கடந்த சில நாட்களாக தென் இந்தியாவில் பிரதமர் மோடிக்கு அதிகம் எதிர்ப்பு கிளம்பி வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மோடியை கடுமையாக தாக்கிப் பேசி வருகின்றன. கஜா புயல் தாக்கத்தினால் சுமார் 3 லட்சம் பேர் விடிழந்ததையும் 11 லட்சம் மரங்கள் வீழ்ந்ததால் பலர் வாழ்வாதாரத்தை இழந்ததையும் அவர் சிறிதும் கவனம் கொள்ளவில்லை என எதிர்க்கட்சிகள் குறை கூறுகின்றன. மேலும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர் நேரில் வந்து ஆறுதல் கூறாததற்கு மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு உள்ளது.

 

”தூத்துக்குடியில் நடந்த ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போராட்டம் வன்முறையாக மாறி துப்பாக்கி சூடு நிகழ்ந்தது. இதில் 13 பேர் கொல்லப்பட்டனர். இது குறித்து பிரதமர் மோடி மௌனம் சாதித்து வருகிறார். மேகதாது அணை குறித்து மத்திய அரசு கர்நாடகாவுக்கு சாதகமாக நடந்து வருகிறது. நீட் தேர்வு விவகாரத்திலும் அனைத்து மக்க்ளும் மோடி அரசு மீது கோபத்தில் உள்ளனர்.” என திமுக செய்தியாளர் சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் பிரதமர் மோடி மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் இன்று கலந்துக் கொள்கிறார். அதை எதிர்த்து டிவிட்டரில் ஏராளமான பதிவுகளில் கோபேக் மோடி (#GoBackModi) என பதிவிட்டு வருகின்றனர். இது தற்போது மிகவும் பிரபலமாகி உள்ளது. அத்துடன் பலர் ஈவெரா பெரியார் இதே வாசகத்தை கூறி மோடியை துரத்துவது போலவும் அவர் ஓடிப்போய் ஹெலிகாப்டரில் ஏறிச் செல்வது போலவும் கார்ட்டுன்களும் வெளியிட்டு வருகின்றனர்.

இதற்கு எதிராக பாஜக ஆதரவாளர்கள் மோடியை வரவேற்றும் எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்ததற்கு நன்றி தெரிவித்தும் மதுரை தேங்க்ஸ் மோடி (#MaduraiThanksModi) எனவும் தநா மோடியை வரவேற்கிறது (#TNWelcomesModi) எனவும் டிவிட்டரில் பதிந்து வருகின்றனர்.

பாஜகவின் டிவிட்டுகளும் பிரபலமானாலும் உலக அளவில் கோபேக்மோடி என்பதே மிகவும் பிரபலமாக உள்ளது.