டில்லி

க்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் ராகுலையும் பிரியங்கவையும் விமர்சித்ததற்கு எதிரிக்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ள்ன.

நேற்று முன் தினம் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலராக பிரியங்கா காந்தி அறிவிக்கப்பட்டுள்ளார்,   இதை ஒட்டி அவருக்கு   பலரும்  பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.   பாஜகவின் மூத்த பெண்  தலைவருமான சுமித்ரா மகாஜன் கடந்த 1989 ஆம் வருடத்தில் இருந்து மீரட் தொகுதி பாராளுமன்ற உறுப்பினராக உள்ளவர் ஆவார்.

அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், “பிரியங்கா ஒரு நல்ல பெண்.   ஆனால் அவரை பொதுச் செயலராக நியமித்ததன் மூலம் ராகுல் தன்னால் தனித்து அரசியல் செய்ய முடியாது என்பதை புரிந்து கொண்டாதாக தெரிகிறது.   அதனால் அவர் தனது சகோதரி பிரியங்காவின் உதவியை கேட்டுள்ளார்.

நான் காங்கிரசின் குடும்ப அரசியல் குறித்து ஒன்றும் சொல்ல விரும்பவில்லை.  அது அவர்களின் சொந்த விஷயம்.  ஆனால் தலைமை பண்பு உள்ளவர்களுக்கு தலைமைப் பதவி அளித்து முன்னுக்கு அழைத்து வரவேண்டும் என்பதை மட்டும் சொல்லிக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

இதற்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன்  கார்கே,” சுமித்ரா மகாஜன் ஒரு சபாநாயகர்  அவர் எப்போதும் நடுநிலைமையுடனும் கட்சி சார்பின்றியும் இருக்க வேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்ரனர்.    இவ்வாறு அவர் அரசியல் பேசக்கூடாது.  நான் ஒருவரை குறை சொல்லும் போது நம்மையும் மற்றவர் குறை சொல்வார் என்பதை அவர் மறக்கக் கூடாது” என தெரிவித்துள்ளார்.

முன்னாள் காஷ்மீ ர் முதல்வர் ஒமர் அப்துல்லா தனது டிவிட்டரில், “மேடம், நீங்கள் மக்களவை சபாநாயகர்.  இது போல பெரிய பதவியில் இருந்துக் கொண்டு இப்படிப்பட்ட தரக்குறைவான விமர்சனத்தை செய்யலாமா?” என பதிந்துள்ளார்.