டில்லி
நேதாஜிக்கும் நேருவுக்கும் இடையே கருத்து வேற்றுமை இருந்த போதும் ஒருவர் மீது ஒருவர் மரியாதை கொண்டிருந்தனர் என தி ஒயர் ஊடகம் தெரிவித்துள்ளது.
நேதாஜி என அழைக்கப்படும் சுபாஷ் சந்திர போஸ் மற்றும் நேருவுக்கு இடையே விரோதம் இருந்ததாக பாஜகவினரால் கூறப்பட்டு வருகிறது. நேரு ஒரு கடிதத்தில் நேதாஜியை ஒரு போர் கிரிமினல் என குறிப்பிட்டதாக சென்ற வருடம் தகவல்கள் வெளியாகின. அந்த தகவல் மீண்டும் சமூக வலை தளங்களில் பாஜக ஆதரவாளர்களால் பரப்பப்பட்டு வருகின்றன.
இது குறித்து தி ஒயர் ஊடகம் வெளியிட்டுள்ள தகவல் பின் வருமாறு :
“நேரு எழுதியதாக வெளியாகி உள்ள லெட்டர் போலியாக தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஏராளமான எழுத்துப் பிழை மற்றும் இலக்கணப் பிழை உள்ளது. நேருவின் எழுத்துப் போல இந்த கடிதம் இல்லை. இதை சங் பரிவார் அமைப்புக்கள் போலியாக உருவாக்கியதாக சரித்திர ஆய்வாளர் ராமச்சந்திர குகா உறுதி செய்துள்ளார்.
கடந்த 1928 ஆம் வருடம் பகத் சிங் ‘புதிய தலைவர்களின் கருத்துக்கள்’ என்னும் தலைப்பில் எழுதிய கட்டுரையில் நேருவையும் நேதாஜியையும் மாபெரும் தலைவர்கள் என புகழ்ந்துள்ளார். அவர் அந்த கட்டுரையில் இளைஞர்கள் நேருவை பின்பற்ற வேண்டும் என கூறி இருந்த போதிலும் நேரு மற்றும் நேதாஜி ஆகிய இருவரையும் புகழ்ந்துள்ளார். பகத்சிங் தூக்கிலிடும் போது அவரை சந்திக்க வந்த வழக்கறிஞரிடம் தமக்கு சட்ட உதவி செய்த நேருவுக்கும் நேதாஜிக்கும் நன்றியை தெரிவித்துள்ளார்.
கடந்த 1938-39 ஆம் வருடம் காங்கிரஸ் தலைவராக மகாத்மா காந்தி தேர்ந்தெடுகப்பட்ட போது அவர் சுதந்திரம் பெற அகிம்சை வழியை பின்பற்றக் கோரிக்கை விடுத்தார். ராணுவத்தின் மூலம் சுதந்திரம் அடைய வேண்டும் என்னும் நேதாஜிக்கு படேல், பிர்லா, ராஜேந்திர பிரசாத் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால் நேரு அவர்களுடன் இணையவில்லை.
அதன் பிறகு 1939 ஆம் வருடம் நேதாஜி காங்கிரஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு காந்தியின் ஆதரவு பெற்ற பட்டாபி சீதாராமையாவை தோற்கடித்தார். அதை எதிர்த்து போராட்டம் நடத்திய படேல் மற்றும் அவரு குழுவினருக்கு காந்தி ‘பட்டாபி சீதாராமையாவின் தோல்வி எனது தோல்வி’ என தெரிவித்தார். ஆனால் நேரு இரு புறமும் ஆதரவு தெரிவிக்கவில்லை. இதற்காக நேதாஜி நேருவுக்கு வருத்தம் தெரிவித்து கடிதம் எழுதி இருந்தார். அதன் பிறகு பிரிட்டனுக்கு எதிராக ராணுவப் புரட்சி செய்ததல் வீட்டுக்காவலில் வைக்கப்ப்பட்ட நேதாஜி இந்தியாவில் இருந்து தப்பி ஓடி ஜெர்மனியில் இடைக்கலம் புகுந்து இந்திய தேசியப் படையை உருவாக்கி போரடி வந்தார்.
ஆயினும் அவர் காந்தி மீதும் நேரு மீதும் வைத்திருந்த மரியாதை குறையவில்லை. சொல்லப்போனால் கடந்த 1940களில் நடந்த இந்திய சுதந்திரப் போரில் காந்தியும் நேருவும் இரு தூண்களாக இருந்தனர். ஆனால் அப்போது இந்திய் மகாசபை மற்றும் ஆர் எஸ் எஸ் இயக்கத்தினர் பிரிட்டன் அரசுக்கு ஆதரவு அளித்தனர்.
ஏற்கனவே காங்கிரசில் இருந்த போது நேதாஜி மதவாத சக்திகளை சார்ந்தவர்களுக்கு பொறுப்பு அளிப்பதை எதிர்த்து வந்தார். அதற்குப் பிறகு இத்தகைய சக்திகள் காங்கிரசில் நுழைவதற்கு நேதாஜி மட்டுமின்றி நெருவும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். அது மட்டுமின்றி வந்தே மாதரம் பாடலுக்கு பதிலாக ஜனகணமன பாடலை தேசிய கீதமாக அவர் அறிவித்திருந்தார். சுதந்திரத்துக்கு பின் நேருவும் அதே பாடலை தேசிய கீதமாக அதிகாரபூர்வமாக அறிவித்தார்.” என குறிப்பிடப்பட்டுளது.