டில்லி
மக்களவை தேர்தலில் ஜெட் ஏர்வேஸ் விமான நிலையத்தின் வாரக்கடன் கடுமையான தாக்கம் ஏற்படுத்தலாம் என ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
கடந்த 2014 நாடாளுமன்ற தேர்தலில் மோடி அனைத்து வர்த்தகங்களையும் மேம்படுத்த உள்ளதாகவும் அதன் மூலம் லட்சக்கணக்கான வேலை வாய்ப்புக்கள் கிடைக்கும் எனவும் உறுதி அளித்தார். ஆனால் பொருளாதார ஆர்வலர்கள் தற்போது அனைத்து வர்த்தகங்களிலும் பணமதிப்பிழப்பு மற்றும் ஜி எஸ் டி அமுலாத்தின் பிறகு கடுமையான பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். வேலை வாய்ப்பு அதிகரிக்காமல் பலர் வேலை இழந்துள்ளதாகவும் தொழிலாளர்கள் தெரிவிக்கின்றனர்.
வங்கிகளின் வாராக்கடன்கள் அதிகரித்து வருவதற்கு முக்கிய காரணம் தற்போது ஏற்பட்டுள்ள வர்த்தக பின்னடைவே ஆகும் என பல பொருளாதர ஆர்வலர்கள் தெரிவித்து வருகின்றனர். வர்த்தகம் நலைவடைந்ததால் கடன் வாங்கியோர் கடனை திருப்பிச் செலுத்த முடியாத நிலையில் உள்ளனர் எனவும் அதனால் வாராக்கடன்கள் வருடம் தோறும் அதிகரிப்பதாகவும் பல தொழிலதிபர்கள் கூறி உள்ளனர்.
நாட்டின் இரண்டாவது பெரிய விமான நிறுவனமான ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்துக்கு தற்போது சுமார் ரூ. 7500 கோடி கடன் உள்ளது. இதனால் இந்த நிறுவனம் வட்டிக்கே வருமானத்தை அளித்து வருகிறது. அதனால் பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த நிறுவனத்தில் இருந்து சுமார் 23000 பேர் வேலை இழந்துள்ளனர். அது மட்டுமின்றி நிதிப்பற்றாக்குறை காரணமாக ஊழியர்களுக்கு ஊதியம் தரவே தடுமாறும் நிலையில் ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் உள்ளது.
இந்த நிலைக்கு பிரதமர் மோடி ஒரு காரணம் இல்லை என அரசு தரப்பில் தெரிவித்தாலும் சமீபத்தில் ஏற்பட்ட எரிபொருள் விலை உயர்வும் இந்த நிறுவனத்தின் இழப்புக்கு முக்கியமான காரணம் ஆகும். எரிபொருள் விலை உயர்ந்த போதும் வர்த்தகப் போட்டி காரணமாக ஜெட் ஏர்வேஸ் தனது பயணக் கட்டணத்தை உயர்த்தவில்லை என்பதால் இழப்பு அதிகரித்தது.
”மக்களவை தேர்தல் நெருங்கி வரும் இந்த நேரத்தில் நாட்டின் இரண்டாவது பெரிய விமன நிறுவனத்துக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது . ஆகவே இதனுடைய தாக்கம் தேர்தலில் எதிரொலிக்கும். அது மட்டுமின்றி இந்த நிறுவனத்துக்கு கடன் அளித்திருப்பவை அனைத்தும் பொதுத் துராஇ வங்கிகள் என்பதா இந்த வங்கிகளின் வாராக்கடன் தொகையும் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.