வேலூர்:

மிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான வாழப்பாடியாரின் 79வது பிறந்த நாள் நேற்று தமிழகம் முழுவதும் காங்கிரசாரால் வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. பல இடங்களில் ஏழைகளுக்கு அன்னதானமும், நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.

வேலூர் அருகே உள்ள சேத்துப்பட்டில், சேத்துப்பட்டு வந்தவாசி சாலையில்,  முன்னாள் பெட்ரோலியத்துறை அமைச்சர் வாழப்பாடியாரின் 79வது பிறந்த தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

மாநில செயற்குழு உறுப்பினர் ஜி.முனிரத்தினம் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு வாழப்பாடியார் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து இனிப்பு மற்றும் அன்னதானம் வழங்கினார். நிகழ்ச்சியில் முன்னாள் நகர காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, முன்னாள்  காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணமூர்த்தி, மாவட்ட எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் சேகர், ஐஎன்ஆர்எல்எப் மாவட்ட செயலாளர் பரசுராமன், ஐஎன்டியுசி மாவட்ட தலைவர் லூகாஸ், முடன்னாள நகர செயலாளர் தசரதன், தேவிகாபுரம் இளங்கோ, பச்சையப்பன், கோபால், மாரி, சேகர் உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர்.

விழாவில் ஏராளான பொதுமக்களும் கலந்துகொண்டனர். விழாவையொட்டி சுமார் 1000 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.