டில்லி,
ஜனவரி 20ந்தேதி முதல் காஷ்மீர், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு நிகழும், இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் எச்சரிக்கை விடுத்து உள்ளது.
வட மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக நிலவி வரும் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து துண்டிக்கப்படுவதால், வாகன போக்குவரத்து மட்டுமின்றி ரயில், விமான போக்குவரத்துக்களும் பல மணி நேரம் தாமதமாகி வருகின்றன. பனிமூட்டம் காலை 11 மணி வரை நீடிப்பதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், வட மாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் மேலும் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர், இமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மூன்று மலைப்பகுதி களையும் உள்ளடக்கிய நாட்டின் வடக்குப் பகுதிகள் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனிப்பொழிவு ஏற்படும் என்றும், ஆனால் இந்த ஆண்டு ஜம்மு மற்றும் காஷ்மீர் மாநிலத்தில் கடுமையான பனிப்பொழிவு, பனிமழையாக பொழியும் என்றும், பல இடங்களில் இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும் எச்சரித்துள்ளது.
மேலும், உத்தரகாண்ட், இமாச்சல பிரதேச மாநிலங்களிலும் பனி பொழிவு அதிக அளவில் இருக்கும், இதன் காரணமாக பனிச்சரிவு ஏற்படும் என்றும் எச்சரித்துள்ளது.
in, , from ;