பிரபல இயக்குனர் சிவாவின் இயக்கத்தில் நடிகர் அஜித், நயன்தாரா நடித்து பொங்கலுக்கு வெளியான விஸ்வாசம் திரைப்படம் வசூலில் சாதனையை படைத்துள்ளது. தமிழகத்தில் மட்டும் கடந்த 7 நாட்களில்  ரூ.125 கோடி வசூலை தாண்டி உள்ளதாக படத்தின் விநியோகஸ்தர் அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா நடித்த விஸ்வாசம் திரைப்படம், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 10ம் தேதி நாடு முழுவதும் வெளியாகி பரபரப்பு ஓடி வருகிறது. ரஜினியின் பேட்ட படத்தை எதிர்த்து விஸ்வாசம் களமிறங்கியதால், படம் வெற்றிபெறுமா என கேள்விக் குறி எழுந்த நிலையில், விஸ்வாசம் படம், பேட்ட படத்தை தூக்கி சாப்பிட்டு வசூலை வாரி குவித்து வருகிறது.

விஸ்வாசம் படத்தை   தமிழகம் முழுவதும் கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் நிறுவனத்தின் ராஜேஷ் விநியோகம் செய்திருந்தார்.

இந்நிலையில், விஸ்வாசம் திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 125 கோடி ரூபாய் வசூலை ஈட்டியிருப்பதாக கே.ஜே.ஆர். ஸ்டூடியோஸ் ராஜேஷ் அதிகாரப்பூர்வமாக டிவிட்டரில் அறிவித்துள்ளார். வரும் நாட்களில் வசூல் மேலும் அதிகரிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ள ராஜேஷ், தமிழக மக்களுக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறியுள்ளார்.

அதேவேளையில் பேட்ட படத்தின் 11 நாள்  வசூல் ரூ.100 கோடி என்று படத்தை வெளியிட்ட டிஸ்டிரிபுயூட்டர் தெரிவித்துஉளளார்.  மேலும் உலக அளவில் பேட்ட படம் ரூ.65 கோடி வசூலித்துள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]