பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இரண்டே நாட்களில் ரூ.303 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

tasmac

தமிழக அரசிறகு அதிக வருமானம் ஈட்டித்தருவதில் டாஸ்மாக் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால் தமிழகம் முழுவதும் 4,500க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் உள்ளன. சாதாரண நாட்களில் இதன் வருமானம் ரூ.70 முதல் 85 கோடி வரை இருக்கும். இதே விடுமுறை நாட்கள் என்றால் மது விற்பனை ரூ.90 கோடிக்கு மேல் நடைபெறும்.

பொங்கலில் ஓவரா பொங்கிய டாஸ்மாக் வசூல்…. : ரூ.303 கோடிக்கு மது விற்பனை!
சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரூ.303 கோடிக்கு மதுவிற்பனை செய்யப்பட்டுள்ளது. போகி, பொங்கல் என இரண்டு நாட்களில் மொத்தம் ரூ.303 கோடிக்கு மதுவிற்பனை நடந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல் புத்தாண்டு, தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட விழா காலங்களில் மதுவிற்பனை பலமடங்கு அதிகரிக்கும். சுமார் ரூ.600 கோடிக்கு மேல் மது விற்கப்படுவது வழக்கம். இந்நிலையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரூ.750 கோடி வரை மதுவிற்பனை நடைபெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

அதற்கு ஏற்றார் போல் போகி மற்றும் பெரும்பொங்கல் என இரண்டு நாட்களில் மட்டும் ரூ.303 கோடிக்கு மது விற்பனையாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனை தொடர்ந்து காணும் பொங்கல் அன்று ம்துவிற்பனை மேலும் அமோகமாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.