அரசியலுக்கு வரப்போவதாக அறிவித்த ரஜினி, அது ஆன்மிக அரசியல் என்று கூறிய நிலையில், தொடர்ந்து புதிய படங்களில் நடிக்க ஆர்வம் காட்டி வருவதால்… ஆன்மிக அரசியலை அம்போ வென விட்டு விடுவாரோ என அவரது ரசிகர்கள் கலக்கத்தில் உள்ளனர்.
இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர் ரஜினி நடித்துள்ள பேட்ட படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்துள்ள நிலையில், மீண்டும் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ஆகெம் (Ahem) என்ற புதிய படத்தில் ரஜினி நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடிகைகள் திரிஷா, சிம்ரன், மேகா ஆகாஷ், நடிகர்கள் விஜய்சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, நவாசுதீன் சித்திக் உள்பட பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வெற்றிகரமாக ஓடி வசூலை வாரிக்கொண்டு வருகிறது.
இதற்கிடையில், பிரபல சர்க்கார் சர்ச்சை இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் ரஜினி வைத்து அடுத்த படத்தை இயக்குவதாக தகவல் வெளியானது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு நாற்காலி என அந்த படத்திற்கு பெயரிடப்பட்டு இருப்பதாகவும், இந்த படம் முழுக்க முழுக்க அரசியல் படம் என்றும் என்றும் தகவல்கள் பரவி வருகினற்ன.
இந்த நிலையில், பேட்ட இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் மற்றொரு படத்திலும் நடிக்க ரஜினி ஒப்ந்தம் செய்யப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. இது பரபரப்பாக பேசப்படு கிறது.
ஆன்மிக அரசியலை முன்னெடுக்கப்போவதாக ரஜினி அறிவித்து ஓராண்டு முடிவடைந்த நிலையில், தனது ரசிகர்களை அவ்வப்போது உசுப்பேத்தி விட்டு தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். இது அவரது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி, அது ஆன்மிக அரசியல் என்று கூறினார். பின்னர் தனது ரசிகர் மன்றங்கள் மக்கள் மன்றங்களாக மாற்றி, சமூக நலப்பணிகளிலும் ஈடுபட்டு வருகிறார்.
விரைவில் நாடு முழுவதும் நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், ரஜினி அரசியல் களத்தில் இறங்கி கலக்குவார் என அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள், ரஜினி ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் வேளையில், ரஜினியோ தொடர்ந்து புதிய படங்களில் நடிப்பதிலேயே கவனம் செலுத்தி வருகிறார்.
ஏற்கனவே, ரஜினியின் அரசியல் அறிவிப்பு வெளியான பிறகு, அவர் நடித்த கபாலி, காலா படங்கள் வெளியாகும் நேரங்களில் மட்டும், தனது ரசிகர்களை அழைத்து அரசியல் பேசி, படத்தை வெற்றிகரமாக ஓட்டிய ரஜினி, இது தொடர்பாக கடும் விமர்சனங்கள் எழுந்ததை தொடர்ந்து, சமீபத்தில் வெளியான 2.0 மற்றும் பேட்ட படங்களின் ரிலீஸ் சமயத்தில் ரசிகர்களுடான சந்திப்பை தவிர்த்தார்.
இந்த நிலையில், 2 புதிய படங்களில் ரஜினி ஒப்பந்தம் ஆகி இருப்பதாகவும், படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக ரஜினியின் ஆன்மிக அரசியல்…அம்போவாகும் நிலை ஏற்பட்டுள்ளது. ரஜினி ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.