மும்பை:
ஏடிஎம்-களில் பயன்படுத்தப்படும் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் இனி ‘சிப்’ இருந்தால் தான் பயன்படும். இந்த நடைமுறை ஜனவரி 1 முதல் அமலுக்கு வந்துள்ளது.
நாட்டில் உள்ள பெரும்பான்மையான ஏடிஎம் இயந்திரங்களின் தொழில்நுட்பம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. இந்த மாற்றம் குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கும் வங்கிகள் குறுந்தகவல் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர்.
பாதுகாப்பு கருதி கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகளின் தொழில் நுட்பத்தை மாற்றியமைக்க வங்கிகளை மத்திய கேட்டுக் கொண்டதையடுத்து, இந்த கார்டுகளில் ‘சிப்’ பொருத்தப்பட்டுள்ளது.
இந்த கார்டுகள் மூலம் பணத்தை பெற்றதும், மறக்காமல் கார்டுகளை திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் வாடிக்கையாளர்களுக்கு வங்கிகள் நினைவூட்டியுள்ளன.
எனவே, இனி பழை கிரெடிட் மற்றும் ஏடிஎம் கார்டுகள் செல்லாது.