டில்லி:

ர்செல் மேக்சிஸ்  வழக்கு தொடர்பாக முன்ஜாமின் பெற்றுள்ள முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் மற்றும் அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தை கைது  செய்வ தற்கான தடை  பிப்ரவரி 1ந்தேதி வரை மீண்டும் நீட்டித்துள்ளது நீதி மனற்ம்.

கடந்த காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியின்போது, ப.சிதம்பரம் நிதி அமைச்ச ராக இருந்தார். அப்போது, அவரது மகன் கார்த்தி சிதம்பரத்தின் நிறுவனம் சட்ட விரோத பணப்பரிவர்த்தனை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டது.

இது தொடர்பாக சிபிஐ, அமலாக்கத்துறை ஆகியவை ப.சிதம்பரம், அவரது மகன் கார்த்தி சிதம்பரம் ஆகியோரை கைது செய்து சிறையில் அடைக்க துடித்து வருகிறது.

ஆனால், இது தொடர்பாக பாட்டியாலா நீதிமன்றத்தில் இருவர் தரப்பிலும் ஜாமின் கோரி மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுக்கள் மீது இருவருக்கும் ஜாமின் வழங்கப்பட்டுள்ள நிலையில், தற்போதும் மேலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே கடந்த ஆண்டு  18-ம் தேதி விசாரணையின்போது,  சிபிஐ தரப்பில் கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுவழக்கை ஒத்திவைக்க  கேட்டுக் கொள்ளப்பட்டது. அதை ஏற்ற நீதிமன்றம் ஜனவரி 11ந்தேதிக்கு தள்ளி வைத்தது.

இந்த நிலையில் வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடைபெற்ற விசாரணையை அடுத்து, வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை பிப்ரவரி 1ம் தேதிக்கு ஒத்திவைப்பதாக தலைமை நீதிபதி ஓ.பி.ஷைனி அறிவித்தார்.

அதுவரை சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்குகளில் ப.சிதம்பரம் மற்றும் கார்த்தி சிதம்பரத்தை கைது செய்யக்கூடாது எனவும் நீதிபதி உத்தர விட்டார்.