டில்லி:
லஞ்ச குற்றச்சாட்டு காரணமாக சிபிஐ அதிகாரிகள்மீது சிபிஐ பதிவு செய்துள்ள வழக்கை ரத்து செய்யக்கோரி, சிபிஐ சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தானா தொடர்ந்த வழக்கை டில்லி உயர்நீதி மன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
ஐதராபாத்தை சேர்ந்த பிசினஸ் மேன் சதிஷ்பாபு சனா மீதான கறுப்பு பண வழக்கை சிபிஐ சிறப்பு இயக்குநர் ராகேஷ் அஸ்தானா தலைமை யிலான சிறப்பு புலனாய்வு குழு விசாரித்து வந்தது. இந்த குழுவை சேர்ந்தவர்கள் குற்றம் சாட்டப்பட்டுள்ள மொயின் குரேஷியிடம் இருந்து தரகர் வழியாக ராகேஷ் அஸ்தானா ரூ. 2 கோடி லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பாக சிபிஐ இயக்குநர் அலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தானா இடையிலான பனிப்போர் தொடர்ந்த நிலையில் இருவரையும் மத்திய அரசு கட்டாய விடுப்பில் அனுப்பியது.
அதைத்தொடர்ந்து இந்த புகார் காரணமாக, ரகேஷ் அஸ்தானா, துணை கண்காணிப்பு அதிகாரி தேவேந்திரகுமார், மனோஜ் பிரசாத் உள்பட 4 பேர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, ராகேஷ் அஸ்தானா சார்பில் டில்லி உயர்நீதி மன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை விசாரிக்க டில்லி உயர்நீதி மன்ற நீதிபதி, நஜ்மி வாசிரி மனுவை தள்ளுபடி செய்தார். குற்றம் சாட்டப்பபட்டவர்கள் மீது பதியப்பட்டுள்ள முதல்தகவல் அறிக்கையும் ரத்து செய்ய மறுத்து விட்டார்.
அத்துடன், ராகேஷ் அஸ்தானா மற்றும் தேவேந்திர குமாருக்கு எதிரான விசா ரணையை 10 வாரங்களுக்குள் முடிக்க வேண்டும் எனவும் சிபிஐக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.