டில்லி:

பிரதமர் மோடி திமுகவுக்கு கூட்டணி அழைப்பு விடுக்கவில்லை என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை கூறினார்.

டில்லியில் நடைபெறும் பாஜக தேசிய குழு கூட்டத்தில் கலந்துகொள்ள டில்லி சென்றுள்ள தமிழிசை இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தமிழிசையிடம், நேற்றைய மோடியின் கூட்டணி அழைப்பு, அதற்கு திமுகவின் ரியாக்சன்  குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

தற்போதைய கூட்டத்தில் கூட்டணி குறித்து விவாதிக் கப்படவில்லை என்றவர், மோடி தலைமையிலான அரசு தமிழகத்திற்கு நல்லதுதான் செய்து வருகிறது என்றும் கூறினார்.

பிரதமர் மோடி, தேசிய எண்ணத்தோடு யார் வேண்டு மானாலும் பாஜகவுடன் கூட்டணி வைக்கலாம் என்றுதான் கூறினாரே தவிர,  இந்தந்த கட்சிகள் தான் கூட்டணிக்கு வரவேண்டும் என கூறவில்லலை என்றும் தெளிவு படுத்தினார்.

தொடர்ந்து பேசிய தமிழிசை,  பாஜகவுடன் கூட்டணி அமைக்க ஸ்டாலினுக்கு ஏன் ஆசை வருகிறது என்று கேள்வி எழுப்பியவர்,  ஸ்டாலின் வரிந்துகட்டி பேசுவதால்தான் ஏதோ சந்தேகம் வருகிறது என்றும்,திமுகவை கூட்டணிக்காக பிரதமர் மோடி அழைக்கவில்லை. ராகுல்காந்தி தலைமையில்தான் கூட்டணி என அழுத்தமாக ஸ்டாலின் கூற வேண்டாமா? என்றும் கூறினார்.