போர்ட் பிளேயர்:
பிரதமர் மோடி கடந்தஆண்டு டிசம்பர் 30ந்தேதி அந்தமான் நிக்கோபார் தீவுகளுக்கு பயணம் செய்தார். அப்போது அந்தமான் கடற்கரையில், ஐ லவ் போர்ட் பிளேயர் என்று காங்கிரீட்டால் அழகாக கட்டப்பட்டு வரவேற்கப்பட்டது.
இதன் அருகே சென்று பிரதமர் மோடி நிற்பது போல புகைப்படங்களும் வெளியாகின. ஆனால் ஒருசில நாட்களில் அந்தமான் தீவு பகுதிகளை தாக்கி பபுக் புயல் போர்ட் பிளேயர் என்ற பிளைவுட் மற்றும் காங்கிரிட்டில் அமைக்கப்பட்ட சுவரையும் நொறுக்கி சென்றுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
ரதமர் போர்ட் பிளேயர், அந்தமான் வந்தபோது பல்வேறு சமூக நல திட்டங்களை தொடங்கி வைத்தார். அப்போது,மூன்று தீவுகளுக்கு பெயர் மாற்றமும் செய்து வைத்தார்.
அங்குள்ள ராஸ் தீவு இனிமேல் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தீவு என்றழைக்கப்படும் என அறிவித்தார்.
தொடர்ந்து அந்தமானின் போர்ட் பிளைர் நகரில் பல்வேறு திட்டங்களை தொடங்கி வைத்த மோடி, வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் அங்குள்ள காலா பானி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தியாகிகள் நினை விடத்தில் அஞ்சலி செலுத்தினார்.
அப்போது, நரேந்திர மோடி தடுப்புச்சுவர் திட்டத்திற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.
அத்துடன், சுபாஷ் சந்திரபோஸ் நினைவைக் கௌரவிக்கும் வகையில் கூட்டத்தில் இருந்த மக்கள் அனைவரும் தங்களது கை பேசிகளில் உள்ள விளக்குகளை எரியவிட்டு அஞ்சலி செலுத்துமாறு மோடி கேட்டு கொண்டார்.
மக்களும் அவ்வாறே செய்து ‘நேதாஜி வாழ்க’ என கோஷமிட்டதுடன், அங்குள்ள பல்கலைக்கழகத்துக்கு நேதாஜியின் பெயர் சூட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் அவரை வரவேற்று போர்ட் பிளேயர் கடற்கரையில் வைக்கப்பட்டிருந்த ஐ லவ் போர்ட் பிளேயர் தடுப்புச்சுவர் பபுக் புயலுக்கு பலியானது. இது பாஜகவினரிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.