பாட்னா:

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து, தி ஆக்ஸிடெண்டல் பிரைம் மினிஸ்டர் என்ற படம் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த படம் வரும் 11ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில், சமீபத்தில் படத்தின் டிரைலர் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த படத்துக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், பீகார்  நீதி மன்றம், படத்தில் நடித்துள்ள பாலிவுட் நடிகர் அனுபம் கெர் உள்பட குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது எப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிய அதிரடி உத்தரவு பிறப்பித் துள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் ஊடக ஆலோசகர் சஞ்சய் பாரு எழுதிய ‘தி ஆக்ஸி டெண்டல் பிரைம் மினிஸ்டர்’ என்ற புத்தகத்தின் அடிப்படையில், அனுபம் கேர் நடிப்பில்  முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் பற்றிய பாலிவுட் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு (2018) மார்ச் மாதம் தொடங்கியது. அவருடன் அக்ஷய் கண்ணாவும் நடித்துள்ளார். இந்த படத்தை  ரத்னாகர் கட்டே இயக்குகிறார்.  இந்த படத்துக்கு  திரைக்கதையை  ஹன்சல் மேத்தா என்பவர் எழுதி உள்ளார். படத்தை போஹ்ரா சகோதரர்கள் தயாரித்துள்ளனர்.

இந்த படம் ஜனவரி 11ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த டிசம்பர் 27ந்தேதி படத்தின் டிரைலர் வெளியானது.

படத்தில் அனுபம் கெர் மன்மோகன்சிங்கா நடித்துள்ளார். படத்தில், மன்மோகன் சிங் காங்கிரஸ் தலைமையிடத்தால் கைப்பாவையாக பயன்படுத்தப்பட்டுள்ளது போன்று காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளது.  ஒரு கட்டத்தில் பதவியை ராஜினாமா செய்ய விரும்பும் மன்மோகன் சிங்கை சோனியா காந்தி தடுத்து நிறுத்துவதாக காட்சி வைக்கப்பட்டுள்ளது.

இந்த காட்சிகள் குறித்து பாஜக அரசியல் செய்து வருகிறது. இந்த நிலையில் படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி வருகிறது. படத்துக்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் படத்தின் நடித்துள்ளவர்கள்மீது வழக்கு பதிவு செய்யக்கோரி பீகார் மாநில நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதீர்குமார் ஓஜா என்பவர் கடந்த 2ந்தேதி மனு தாக்ககல் செய்திருந்தார். மனு மீதான விசாரணையை தொடர்ந்து, முசாபர்புர் தலைமை நீதிபதி அனுபம் கர் உள்பட 13 பேர் மீது முதல் தகவல் அறிக்கை பதிய காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.